16வது படிப்பினை
கொலை செய்து தண்டிப்பதும் ஆகுமானதே.
{أَوْ لَأَذْبَحَنَّهُ } [النمل: 21]
அல்லது நிச்சயமாக அதனை நான் அறுப்பேன்.
சுலைமான் (அலை) அவர்களிடம் எறும்புகளுடன் மிருதுவாக நடந்து கொள்ளுமளவு இரக்க மனப்பான்மை இருந்தும் கூட ஹுத்ஹுதுக்கு தீர்ப்பு வழங்கையில் கடினமாக நடந்து கொண்டார்கள். சிலவேளை தண்டனை கொலை வரையும் செல்லலாம். இதன் மூலம் கொலைத் தண்டனைக்குத் தகுதியான சில காரியங்களுக்குக் கொலை செய்து தண்டனை வழங்கலாம் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது.
அல்லாஹ் கூறுகிறான்: (( அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் விஷமம் புரிந்து திரிவோருக்குரிய கூலி கொலை செய்யப்படுவது அல்லது சிலுவையில் அறையப்படுவது அல்லது மாறு கை கால்கள் வெட்டப்படுவது அல்லது பூமியிலிருந்து அகற்றப்படுவதேயாகும். ((அல்மாயிதா:33))
எனவே அல்லாஹ் கொலை செய்து தண்டிப்பதை அல்லாஹ்வுடனும் அவனது ரஸூலுடனும் போர்தொடுத்து, பூமியில் குழப்பம் விளைவிப்பவனுக்குரிய தண்டனைகளில் ஒன்றாக ஆக்கிவைத்துள்ளான்.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ((அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை நான் அல்லாஹ்வின் தூதர் என்று கூறிய எந்த முஸ்லிமான மனிதனுடைய இரத்தமும் மூன்று விடயங்களில் ஒன்றைக் கொண்டே தவிர ஹலாலாகாது.
1)உயிருக்கு உயிர்
2)திருமணம் செய்தும் விபச்சாரம் புரிந்தவன்
3) தீனை விட்டும் வெளியேறி கூட்டத்தை விட்டும் வெளியேறியவன்)) (அல்புஹாரி: 637)
இந்த ஹதீஸ், மனித ஆத்மாவுக்கு பரிவுகாட்டவேண்டுமென்ற வாதத்தினடிப்படையில் தூக்குத் தண்டனையை ஒழிக்கும்படிக் கோருவோருக்கெதிரான தெளிவான மறுப்பாகும். அன்பும், அருளுமிக்கவனுமான அல்லாஹ்வும் அகிலத்தாருக்கு அருளாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்களும் கொலையை அதற்குத் தகுதியான குற்றங்களுக்காகவே நியமித்துள்ளனர்.
அல்லாஹ்வின் வேதத்தைத் தீர்ப்பாகக் கருதாத சில நாடுகளில் இத் தூக்குத் தண்டனையை ஒழித்ததின் மூலம் குற்றவாளிகளால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன. குற்றங்கள் அதிகரித்து மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகி அப்பாவிகளுக்கு மத்தியில் பயமும், அச்சமும் படர்ந்துள்ளது.
தொடரும்……