Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-25)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-25)

25வது படிப்பினை
إِنِّي وَجَدتُّ امْرَأَةً تَمْلِكُهُمْ  النمل : ٢٣﴿
ஒரு பெண் அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன்.
பெண்களுக்கு ஆட்சி வழங்குவது அந்நியர்களது பண்பாகும்.
ஒரு பெண்ணை அரசியாக நியமிப்பது அந்நியர்களது பண்பாகும். இஸ்லாத்தின் பார்வையில் ஒரு பெண் பிரதிநிதியாகவோ, கவர்னராகவோ, நீதிபதியாகவோ பதவியேற்க முடியாது. தொழுகையில் கூட ஆண்களுக்கு இமாமத் செய்வதோ, ஆண்கள் இருக்கும் இடங்களில் கலந்து வேலை செய்வதோ கூடாது.
அபூ பக்ரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: பாரசீகர்கள் தங்களுக்குக் கிஸ்ராவின் மகளை அரசியாக்கிக் கொண்ட தகவல் கிடைத்த போது தங்களது விடயத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த கூட்டம் நிச்சயமாக எப்பொழுதும் வெற்றியடையவே முடியாது என நபியவர்கள் நவின்றார்கள். (புஹாரி: 4073)
விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு பெண்ணை விசாரிப்பதற்காக நபியவர்கள் உனைஸ் என்ற ஒரு தோழரையே அனுப்பினார்கள் (புஹாரி:2724). ஒரு பெண்ணுக்கு அதிகாரம் வழங்க முடியுமாக இருந்தால் இச்சந்தர்ப்பத்தில் ஒரு பெண்ணையே நபியவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
வலிமை மிக்கதாகக் காணப்பட்ட பெரும் பல இஸ்லாமிய அரசுகளின் வரலாறுகளைப் பார்த்திருக்கிறோம். அவைகள் பலம் மிக்க பாரிய அரசுகளாக மிளிர்ந்து கொண்டிருந்தன. ஆனால் எப்பொழுது அதனது ஆட்சிப் பொறுப்பு பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டதோ அவைகளை பலவீனம் தொற்றிக் கொண்டது. அதன் எதிரிகள் அதனை ஆக்கிரமித்தனர். கண்ணியத்திற்குப் பின் இழிவுற்றது. உறுதியின் பின் உருக்குலைந்தது. வெற்றியடையமுடியாது என்ற நபியவர்களது வாக்கு அவர்களது விடயத்தில் நிரூபனமாகிவிட்டது.
பெண்கள் வீட்டிலே இருக்கவும் என்ற இறைக் கட்டளை இருக்கும் போது பிரதமர், அமைச்சர் போன்ற உயர்ப் பதவிகளுக்கு சில பெண்கள் எப்பொழுது நியமிக்கப்பட்டு, அவள் தனது வீட்டிலிருந்து வெளியேறி, நபியவர்களது சொல்லுக்கு மாறுசெய்து, அசத்தியவாதிகளின் வழியைப் பின்பற்றி, அவளது கண்ணியம் பாதிக்கப்பட்டதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட தீங்குகளோ  ஏராளம்! ஏராளம்!.
 தொடரும்……

Check Also

அமானிதம் | ஜும்ஆ தமிழாக்கம் | Asshiek Abdullah Uwais Meezani |

அமானிதம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 06 – 12 – …

Leave a Reply