20வது படிப்பினை
சந்தேக நபருக்கு தற்பாதுப்பிற்கான உரிமையுண்டு.
உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன்.
ஹுத்ஹுதினது பேச்சு மற்றும் சுலைமான் (அலை) அவர்களுடன் செய்த துணிகரமான உரையாடல் மூலம் அது அச்சுறுத்தலின் கீழ் இருக்கவில்லையென்பது தெளிவாகிறது. மாறாகப் பட்டாளத்தை விட்டும் தாமதித்து அவர்கள் முன் ஆஜராகாமைக்கான காரணத்தை தெளிவுபடுத்தி துணிவுடனும், வலிமையுடனும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டது.
இதன் மூலம் சந்தேக நபருக்கு குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்க முன் அவனுக்குத் தன்னைப் பாதுகாக்கும் தன் ஆதாரத்தை வெயியிடும் உரிமையும் வழங்கப்பட வேண்டுமென்பது தெளிவாகிறது. மேலும் எவ்வளவு பெரிய அரசன் முன்னும் உண்மையுரைப்பதில் துணிவு காட்ட வேண்டும்.
நீதிபதி பிரதிவாதியினது பதிலையும் நியாயத்தையும் கேட்காது தீர்ப்பு வழங்கக் கூடாது என்பது நமது மார்க்கமும் அங்கீகரித்த விடயமே. ஆனால் இன்று எத்தனையோ விசாரணைகள் தவறிழைத்தவன் குற்றவாளி என உறுதி செய்யப்படாமல் அல்லது அவன் தடுக்கப்பட்டதைச் செய்தான் என நிரூபிக்கப்படாமல் மறைவிலே நடந்து முடிகின்றன. இது அநியாயமும் அக்கிரமமாகும். எத்தனையோ கைதிகள் விசாரணைக் காலத்தில் நடந்த கடும் சித்திரவதையினால் தாம் செய்யாதவற்றையும், குற்றங்களையும் ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுலைமான் (அலை) அவர்கள் இச்சட்டங்களின் மூலம் நிரபராதி அல்லது குற்றவாளியென சரியான தீர்ப்பை வழங்க விசாரணைகளில் பூர்த்தியான நீதியைத் நிலைநாட்டினார்கள்.
தொடரும்……