Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-21)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-21)

 
21வது படிப்பினை
சிறப்பு மற்றும் தரத்தில் உயர்ந்தோரிடம் இல்லாத அறிவு அல்லது தகவல் தகுதியில் குறைந்தோரிடம் இருக்கலாம்.
 
{فَقَالَ أَحَطْتُ بِمَا لَمْ تُحِطْ بِهِ} [النمل: 22]
 
உங்களுக்குத் தெரியாத ஒரு விடயத்தை நான் அறிந்து கொண்டேன்.
 
பல்கீஸ் மற்றும் அவளது கூட்டத்தைப் பற்றி சுலைமான் (அலை) அவர்கள் அறியாத ஒரு விடயத்தை ஹுத்ஹுத் அறிந்திருந்தது.;
அவர்கள் வஹீ வரும் நபியாகவும், பெரும் படைப்பலம் மிக்க அரசராக இருந்தும் அண்மையில் இருக்கும் நாட்டு நிலவரங்களை அறிந்திருக்கவில்லை. இது மனித அறிவுக்கு மாற்றமாக, யாரை விட்டும் பூமியிலோ, வானிலோ அணுவளவும் மறையவோ, எந்த மறைவானதும் ஒழியவோ முடியாதோ, அப்படிப்பட்ட அல்லாஹ்வுக்கு மாத்திரமே பூரண அறிவுண்டு என்பதை இச்சம்பவம் பறைசாற்றுகின்றது.
 
அல்லாஹ் கூறுகிறான்: (( அறிவிலிருந்து சிலதைத் தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை.)) (அல்இஸ்ரா:85) இதனால்; சுலைமான் (அலை) அவர்களது தரம் குறைந்துவிடாது. அவர்கள்தான் ஆட்சியும், விளக்கமும், அந்நியமான பறவையினது பாசையின் அறிவும் வழங்கப்பட்டவர்களாயிற்றே.
அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவரில் (தாவூத், சுலைமான்) ஒவ்வொருவருக்கும் நாம் ஆட்சியையும், அறிவையும் கொடுத்தோம்.)) (அந்நம்ல்: 79)  
 
ஹழிர் (அலை) அவர்கள் மூஸா (அலை) அவர்களுடைய தோழமையில் இருந்தபோது கூறினார்கள்: நீர் அறியாத அறிவு என்னிடத்தில் உள்ளது. எனக்குத் தெரியாத அறிவு உம்மிடத்திலுண்டு. என்னுடைய அறிவும், உம்முடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிற்கு முன் இப்பறவை ஆற்றிலிருந்து எடுப்பதைப் போன்றேயன்றி வேறில்லை.
 
أَحَطْتُஅஹத்து என்ற வார்த்தை தகவல்களை விபரமாக அறிதலைக் குறிக்கும். ஏனெனில் ஹுத்ஹுத் பறவை, பல்கீஸ் ஓர் படைப்பலம் மிக்க அரசி என்பதுடன்; சிம்மாசனத்துடன் கூடிய அனைத்து வசதிகளும் அவளுக்கு வழங்கப்பட்டுள்ளது, அவள் சூரியனை வணங்குகிறாள். என அவளது உலகியல், மார்க்கம் பற்றிய அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய தெளிவான, பூரணமான தகவல்களைச் சமர்ப்பித்தது. இதனால்தான்; அவளது நிலவரங்களை மீலாய்வு  செய்யவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
 
தகவல்கள் தெளிவாகவும், அனைத்தையும் உள்ளடக்கியதாயும், உண்மையானதாகவும், பூரணமானதாகவும் இருப்பது தகவல் பரிமாற்றத்தின் ஒழுக்கமுறைகளில் ஒன்றாகும்.
தொடரும்……

Check Also

நம் வாழ்வில் பராக்காவைப் பெறுவதற்கான 15 வழிகள் | ஜும்ஆ தமிழாக்கம் |

நம் வாழ்வில் பராக்காவைப் பெறுவதற்கான 15 வழிகள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி …

Leave a Reply