Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-7)

 
7 வது படிப்பினை
தாஇயின் (அழைப்பாளனின்) வார்த்தை அழகானது, ஏனைய வார்த்தைகளை விடவும் சிறந்தது.
 
அந்த எறும்பினது வார்த்தையினால்  ﴿النمل٢٧:١٩(مِنْ قَوْلِهَا)
 (27:19)
அல்லாஹ்விற்கு அந்த எறும்பினது வார்த்தைகள் மிகவும் பிரியத்திற்கு உரியவைகளாகிவிட்டதனால்,  அதனை சுலைமான் (அலை) அவர்களுக்கு எட்டச் செய்தான். அதனால் அவர்களும் உவகையுற்று புன்முறுவல் செய்தார்கள். அது மாத்திரமின்றி மறுமை நாள் வரை வரும் நபி (ஸல்) அவர்களது சமுதாயமும் அதனது இந்தச் செயலைப் பின்பற்றவும் அதனது வார்த்தைகளைக் கேட்டுப் படிப்பினை பெறவும் சங்கை மிகு வேதமாகிய குர்ஆனிலும் குறிப்பிட்டுள்ளான்.
 
அல்லாஹ்தஆலா குர்ஆனில் நபிமார்கள் மேற்கொண்ட இறை அழைப்புப் பணியையும் அதற்காக மேற்கொண்ட பிரயத்தனங்களையும் அதிகமாகக் கூறியுள்ளான். அவர்களது வணக்கவழிபாடுகளைப் பற்றி மிகக் குறைவாகவே குறிப்பிட்டுள்ளான். காரணம் முழு மனித சமூகத்தின் நேர்வழியும், அதனது ஈடேற்றமும் தங்கியுள்ள அழைப்புப் பணியின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
 
இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது தந்தைக்குச் செய்த பிரச்சாரம், நூஹ் (அலை) அவர்கள் தனது மகன் உட்பட தனது கோத்திரத்திடத்தில் செய்த பிரச்சாரம், மூஸா (அலை) அவர்கள் பிர்அவ்ன் மற்றும் அவனது பிரதானிகளுக்குக் கொடுத்த தஃவத், பனூ இஸ்ராயீல்களுக்கு மத்தியில் ஈஸா (அலை) அவர்கள் செய்த தியாகங்கள்,  போன்றவற்றை அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். அதனால்தான் ((அல்லாஹ்வின் பக்கம் அழைத்து நற்கருமங்கள் செய்து மேலும் நான் அடிபணியக் கூடியோரில் உள்ளவன் எனக் கூறுபவனை விட அழகான வார்த்தைக் கூறுபவர் யார்?)) என அல்லாஹ்வே கேட்கிறான். (புஸ்ஸிலத்:33)
அவ்வாறே பில்கீஸ் ராணி மற்றும் அவளது கூட்டத்தினது நேர்வழிக்காக பாடுபட்ட  ஹுத்ஹுத் என்ற பறவையினது வார்த்தையையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். ஆனால் அதனது உருவமைப்பையோ, தோற்றத்தையோ குறிப்பிடவில்லை. இதன் மூலம் அல்லாஹ் அழகிய வார்த்தை, சிந்திப்பதன் பயன்,  சிறந்த பேச்சு ஆகியவற்றின் பக்கம் நம்மைத் தூண்டுகிறான்.
 
ஸூரதுஸ் ஸூஹ்ருபில் அல்லாஹ் தாயினுடைய (அழைப்பாளனுடைய) வார்த்தையின் மூலம் சத்தியம் கூடச் செய்திருக்கிறான். ((எனது இரட்சகனே நிச்சயமாக இவர்கள் விசுவாசம் கொள்ளாத கூட்டத்தினர் என்ற அவரது வார்த்தையின் மீது சத்தியமாக)) எனக் கூறுகிறான். (43:88)
  البحر المحيط في التفسير (9/ 392)
   தொடரும்……

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply