Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-17)

17வது படிப்பினை
ஆட்சி உறுதிபெற தண்டனைகள் விதிப்பது இன்றியமையாததாகும்.
தண்டனை முறைகள் அரசுகள் நிலைப்பதற்கு அடிப்படை. சமூகத்தில் குற்றங்கள்,பாவங்கள்,மானக்கேடான விடயங்கள் பரவுவதைத் தடுப்பதற்கே அல்லாஹ் ஹத்துகளை (சமூக குற்றத்திற்கான தண்டனை)  விதித்து,அதனை நிறைவேற்றுமாறும் பணித்துள்ளான். ஏனெனில் பாவம் நிகழ்ந்து குற்றவாளி தண்டிக்கப்படவில்லையெனில்,ஏனையோரும் அதனைச் செய்வதற்குத் துணிவு கொள்வர். அதனைத் தொடர்ந்து குழப்பமும்,தீமைகளும் ஊடுருவும். எனவேதான் தண்டனை முறையை விதியாக்கியது இறைவனின் அறிவு ஞானமாகும்.
திருடியவனது கையை வெட்டுமாறும்,திருமணம் செய்யாத விபச்சாரகனுக்கு கசையடி வழங்குமாறும்,திருமணம் முடித்தும் விபச்சாரம் புரிந்தோரை கல்லெறிந்து கொள்ளும்படியும்,வேண்டுமென்று நடந்த கொலைக்குப் பழிதீர்க்கும்படியும் அல்லாஹ் ஏவியதன் காரணம் பலவீனமான ஈமானுடையோரில் யாரது மனம் இதுபோன்ற பாவங்களில் ஈடுபடவும்,குற்றங்களைப் புரியவும் தூண்டுமோ அவர்களை எச்சரிப்பதற்காகவேயாகும்.
இதனாலேயே சுலைமான் (அலை)அவர்களது ஆட்சி ஸ்திரமாகக் காணப்பட்டது. ஜின்கள் கூட அவர்களிடத்தில் கடுமையாக வேலையில் ஈடுபட்டன. தன் வேலையில் பொடுபோக்காக இருப்போரைத் தண்டிப்பதற்கென்று ஒரு சிறைச்சாலையை வைத்திருந்ததனால் அனைவரும் அவர்களுக்குப் பயந்தனர். அவர்கள் தம் கைத்தடியில் சாய்ந்த வண்ணம் அல்லாஹ் அவர்களை மரணிக்கச் செய்த சமயத்தில் கூட ஜின்கள் அவர்களின் மீதுள்ள அச்சத்தினால் தங்களது வேலைகளில்  தொடர்ந்து ஈடுபட்டவண்ணமேயிருந்தனர்.
அல்லாஹ் கூறுகிறான்: (( நாம் அவருக்கு மரணத்தை முடிவு செய்தபோது அந்த ஜின்களுக்கு அவர்களது மரணத்தை கரையான்களே அறிவித்தன.)) ((ஸபஃ : 14))
நபி (ஸல்) அவர்களும் தண்டனை அமைப்பை அங்கீகரித்ததுடன்,அதனை நேரடியாக செயற்படுத்தியும் உள்ளார்கள். பனூ மஹ்ஸூம் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் கரத்தைத் துண்டித்துள்ளார்கள். மாஇஸ் மற்றும் ஙாமிதிய்யா ஆகிய இருவருக்கும் விபச்சாரம் புரிந்ததற்காக கல்லெறிந்து கொலைசெய்தார்கள். எனவே மதீனத்துச் சமூகம் மனமான,சுத்தமான,பாதுகாப்பான சமூகமாகக் காணப்பட்டது.
                                                                                                                      … படிப்பினைகள்  தொடரும்……

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply