Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-8)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-8)

8 வது படிப்பினை
நற்காரியங்களை விரும்பி, அதனைப் பகிரங்கப்படுத்திஅதற்குப் பரிசு வழங்கி உற்சாகமூட்டல்.
அந்த எறும்பினது பேச்சு,  தனது கூட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற ஆர்வம் ஆகிவற்றைக் கண்டு வியப்படைந்த சுலைமான் (அலை) அவர்கள், அதனை மதிக்குமுகமாக  தனது பரிவாரத்தை எறும்புப் புற்றை விட்டு ஓதுங்கிச் செல்லுமாறு பணித்தார்கள். இவ்வாறாக அல்லாஹ் அவ் எறும்புக் கூட்டத்தைப் பாதுகாத்தான்.
இவ்வாறுதான் அல்லாஹ் தனது அடியார்களையும் அவர்கள் உணராமலேயே எத்தனையோ தீங்குகளை விட்டும் பாதுகாக்கிறான்.
மற்றவர்களுக்கும் ஆசை, ஆர்வம் உண்டாகி பின்பற்றி நடக்குமுகமாக நல்ல சொல், செயல்களை மதித்து அவைகளை மக்களுக்கு மத்தியில் பகிரங்கப்படுத்தி அதற்கு கூலி வழங்குவது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும், ஏனெனில் நபி (ஸல்) அவர்களும் நற்செயல்களை மதித்து அதனை ஆர்வமூட்டுபவர்களாகவும்,  தீயகாரியங்களை வெறுத்து அதனை தடைசெய்பவர்களாகவும்  இருந்தார்கள். நற்காரியங்கள் புரிந்தோரை நபியவர்கள் பாராட்டிய எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.
அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:  ((அஷ்அரி கூட்டத்தினர் யுத்தத்தில் அல்லது மதீனாவில் தங்கள் குடும்பங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் தங்களிடமிருப்பவைகளை ஒரு துணியில் ஒன்று சேர்த்து பின்பு அதனை ஒரு பாத்திரத்திலிட்டு தங்களுக்கு மத்தியில் சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னில் நின்றும் உள்ளவர்கள். நான் அவர்களில் நின்றும் உள்ளவன்.)) (புஹாரி:2306)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ((இஸ்லாத்தில் நல்லதொரு வழிமுறையை ஆரம்பித்தவருக்கு, அதனது கூலியும், அதன் மூலம் அமல் செய்தவரது கூலியும் உண்டு. அவர்கள் கூலியில் எவ்வித குறையும் ஏற்படாது. மேலும் யார் தீமையான ஒரு வழிமுறையை உருவாக்குவாரோ அவருக்கு அதனது தீமையும் அவருக்குப் பின் அதனைக் கொண்டு அமல் செய்தோரது கூலியும் உண்டு. அவர்களது பாவத்தில் எக்குறையும் ஏற்படாது.)) (முஸ்லிம்:1691)
தொடரும்……

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply