Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 1

முல்க்
குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்)
بسم الله الرحمن الرحيم
முன்னுரை
நிறைவான வாழ்வுக்கு மறையளித்த மாபெரும் றைவனுக்கே புகழனைத்தும். சாந்தியும், சமாதானமும் சுயநலமே பொது நலம் என மூடநம்பிக்கையில் மூழ்கிக்கிடந்த மக்களை தீனுல் ஸ்லாம் எனும் ஒளி விளக்கின்பால் வழிகாட்டிய கருணை நிறைந்த நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழியை அன்று தொட்டு கியாமநாள் வரை பின்பற்றி வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவர்கள் மீதும் உண்டாவதாக!

உலகில் மனித சமுதாயத்தைப் படைத்த அல்லாஹ் அவர்கள் சீரான வழியில் நடக்க வேண்டுமென்பதற்காக அருள் மறையாம் அல்குர்ஆனை வழங்கினான். அக்குர்ஆனை லகுவாக விளங்குவதற்கு நமக்கு முன்பு வாழ்ந்த பல அறிஞர்கள் பல பாஷைகளில் பல விளக்கவுரைகளை எழுதியுள்ளார்கள். (அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!)


அவ்வடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு அப்படிப்பட்ட ஒரு விளக்கவுரை அவர்கள் கைவசம் கிட்டவில்லை. அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகள் பல உண்டு, மேலும் தஃப்ஸீர் ப்னுகஸீர்” சில பாகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. அதல்லாத வேறு விளக்கவுரைகள் ருப்பதாக தென்படவில்லை. எனவே, மக்களுக்கு அத்தியவசியமான தேவை ருந்து கொண்டிருக்கிறது அதை நிறைவு செய்ய வேண்டுமென்பது எனது ஆசை. அத்துடன் ரியாத் மாநகரில் தஃவா பணிபுரியும் உலமாசபை 2007-ம் ஆண்டு ரமளான் மாதத்தில், குர்ஆனில் ஜுஸ்உ அம்ம”வில் ஓர் போட்டியை நடாத்தியது. அப்போட்டி நடாத்தும் குழுவில் நானும் ஓர் உறுப்பினராக கடமை புரிந்தேன். அதனால் பலரும் மற்ற உலமாக்களுடன் தொடர்பு கொண்டது போல் என்னுடனும் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு தமிழ்மொழியில் விளக்கவுரை எதுவும் கிடையாது; எனவே, னிவரும் காலங்களிலாவது தமிழ் விளக்கவுரை உள்ள புத்தகங்களில் கேள்விகளை வையுங்கள்” என அவர்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

எனவே, வ்விளக்கவுரை எழுதுவதற்குரிய காரணங்களை சுருங்கக் கூறின்:

1.
தமிழில் குர்ஆனுக்கு விளக்கவுரை கிடைப்பது மிக அரிது.

2. தமிழ் பேசும் மக்களுக்கு குர்ஆனில் சில வசனங்களை லகுவாக விளங்க துணைபுரியும்.

3. குர்ஆனுக்கு விரிவுரை எழுதி முடிக்கமுடியாது; அதனால் தான் நாளுக்கு நாள் பல வடிவங்களில் விரிவுரைகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

4. விளக்கவுரைகள் பல காணப்படுவது அல்குர்ஆனின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.5. குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் எழுதுவது எனது நோக்கமாகும்.

ந்த விளக்கவுரைக்கான பெயர் قطوف دانية فى تفسير جزء تبارك“” (நெருக்கமாக உள்ள கனிகள்“). ப்பாகத்திலுள்ள மொத்த சூராக்கள் 11 ஆகும். தை எழுதுவதற்காக அரபியில் உள்ள சுமார் நான்குக்கும் மேற்பட்ட விளக்கவுரைகளை வாசித்து விளங்கி தொகுக்கப்பட்டதாகும். அதனால் தான் சில டங்களில் அறிஞர்களின் கூற்றுகளும் கூறப்பட்டுள்ளன. எனினும் ந்த விளக்கவுரை குர்ஆன், ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.

மனிதன் என்ற அடிப்படையில் தவறுகள் டம் பெற்றிருக்கலாம். அல்லாஹ் மாத்திரம் தான் பரிபூரணமானவன்; குறைகளில்லாதவன். ஆகவே தில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருப்பின் அவைகளை சுட்டிக் காட்டும் பொழுது பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள நாம் தயாராக உள்ளோம். மேலும் ஏனைய பாகங்களுக்கும் தொடர்ந்து விளக்கவுரைகள் எழுதுவதற்கு எண்ணியுள்ளேன் (ன்ஷாஅல்லாஹ்). தை நிறைவு செய்வதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!.

மேலும் தை மீள்பார்வை செய்து பயனுள்ள ஆலோசனைகளை முன்வைத்த மதிப்புக்குரிய உலமாக்களாகிய மௌலவி ஸபருல்லாஹ் (பஹ்ஜி), மௌலவி ரம்ஸான் (மதனி), மௌலவி முஆத் (பஹ்ஜி) ஆகியோருக்கும் மேலும் கணிணியில் தமிழ் மொழியில் அச்சுக்கோர்வை செய்துதவிய உம்மு நுஹா” அவர்களுக்கும் மற்றும் தை வெளியிடுவதற்கு உதவி புரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ{.
இவண்
மௌலவி ரிஷாத் முஹம்மத் சலீம் (ஸஹ்வி, ரியாதி, M.A)
மன்னர் சுஊத் பல்கலைக்கழகம்.
ரியாத்,சவூதி அரேபியா.
பரிந்துரை
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் குதூஃபுன் தானியா” என்ற விளக்கவுரையை முழுமையாகப் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். அது அல்குர்ஆனின் 29-ம் பாகத்துக்கான தமிழ் மொழியில் எழுதப்பட்ட விளக்கவுரையாகும். மேலும் இவ்விளக்கவுரை இலகுவான மொழி நடையைக் கொண்டதும், சம காலத்தில் அரபுப் பாஷையிலுள்ள விளக்கவுரைகளுடன் இணைந்து போகக் கூடியதாகவும் அமைந்துள்ளது. காரணம் நூலாசிரியர் குர்ஆன், சுன்னா அடிப்படையில் விளக்கம் எழுத வேண்டுமென்பதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளார். அத்துடன் சங்கைக்குரிய மேதைகளின் விளக்கவுரைகளின் கருத்துக்களையும் கூறியுள்ளார்.
மேலும் இவ்விளக்கவுரை அதன் தலைப்புக்கேற்ப தெளிவுள்ளதாக இருப்பதுடன் தகவல்கள், மொழிபெயர்ப்பு போன்றவற்றில் கொள்கை சீர் கேடற்று காணப்படுகிறது. எனவே தமிழ் பேசும் மக்களுக்கிடையே இவ்வாறான விளக்கவுரை கிடைக்கப் பெறுவது மிக அரிது. ஆகவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நூலாக அமைந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இவ்வாறான மிகத் தேவையுடைய தலைப்பைத் தெரிவு செய்து, உயர்ந்த பயனுள்ள இந்த புத்தகத்தை வெளியிடுவதற்கு அருந் தியாகத்தை மேற்கொண்ட சகோதரர் மௌலவி ரிஷாத் அவர்கள் உற்பட இந்த நல்ல முயற்சியை பூர்த்தி செய்து நற்கூலியும் பெற்றிட உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் இப்புத்தகம் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யத் தகுந்தது எனக் கூறுகிறேன்.
எனவே,அல்லாஹ் இவைகளை உங்களது நல்லேட்டில் பதிவு செய்வதுடன் பயனுள்ளதாகவும்,மற்றவர்கள் பயன் பெறக்கூடியதாகவும் ஆக்கி வைப்பானாக! அவனே அதற்குப் பொறுப்பாளன்,அவனே உங்களுக்கு நற்கூலி வழங்க வேண்டுமென பிரார்த்தித்து முடிக்கிறேன்.
வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ.
அடியேன்,
மௌலவி ஸபருல்லாஹ் மரைக்கார் அப்துல் ஹாதி (பஹ்ஜி)
(ரியாத் மாநகர தமிழ் உலமா சபைத் தலைவர்)
(வட ரியாத் தஃவா நிலையத்தின் அழைப்பாளர்)
بسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…..

سورة الملك
அல் முல்க் – ஆட்சி

இந்த அத்தியாயம் மக்காவில் இறங்கியது.
இந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்கள் முப்பது (30) ஆகும்.
இந்த அத்தியாயத்திற்கு வாகியா,முன்ஜியா எனவும் கூறப்படும்.
இந்த அத்தியாயத்தின் தலைப்புப் பற்றி சில வரிகள்….

1. பரிப்பூரண ஆட்சி அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமானது.

2. அல்லாஹ் நாடியவர்களுக்கு ஆட்சியை வழங்குவான்,அவன் நாடியவர்களிடமிருந்து அதனைப் பறித்தும்விடுவான்.

3. அல்லாஹ்வின் ஆட்சி நிரந்தரமானது,மனிதர்களின் ஆட்சி நிரந்தர மற்றது.

4. அல்லாஹ் தான் விரும்பியபடி ஆட்சி செய்வான்,மனிதர்கள் அவர்கள் விரும்பியபடி ஆட்சி செய்யமுடியாது.

இந்த அத்தியாயத்தின் சிறப்பு.
புனித அல்குர்ஆனில் ஓர் அத்தியாயம் இருக்கிறது. அது முப்பது வசனங்களைக் கொண்டதாகும். அதை ஓதுபவருக்கு அவரது பாவம் மன்னிக்கப்படும் வரை அது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும். அது தான் தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” என்று ஆரம்பமாகும் அத்தியாயமாகும் என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).
நூல்: அபூதாவூத்,திர்மிதி,நஸாஈ
குறிப்பு: சேக் அல்பானி (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை ஸஹீஹ் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.

 

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١﴾

 

 

(எவனது கைவசம் ஆட்சி இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோனாவான். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.) அல்முல்க் –67: 1
அல்லாஹ் இவ்வசனத்தில் அவனைப் புகழ்ந்து ஆரம்பம் செய்கிறான். மேலும், அவன் கைவசமே ஆட்சி இருப்பதாகவும் கூறுகிறான்.

அதன் விளக்கம் யாதெனில், அனைத்துப் படைப்பினங்களையும் அவன் நாடிய பிரகாரம் ஆட்சி செய்யும் அதிகாரம் அவனுக்குரியதாகும் அவனைத் தட்டிக் கேட்க யாராலும் முடியாது.

இது போன்று அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தன்னைப் புகழ்ந்துரைக்கின்றான்.
உதாரணமாக:

(எவனது கையில் ஒவ்வொரு பொருளின் அதிகாரங்களும் உள்ளனவோ அவன் தூயவன். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!)
யாஸீன்-83.
அல்லாஹ் தன்னைப் புகழ்ந்துரைப்பது போல் மனிதர்கள் யாரும் தம்மைத் தாமே புகழ்ந்து கூறமுடியாது. காரணம், அல்லாஹ் அவ்வாறு கூறுவதைத்தடை செய்துள்ளான்.
அல்லாஹ் கூறுகிறான்:

(எனவே உங்களை நீங்களே பரிசுத்தமாகக் கருதிக் கொள்ளாதீர்கள்! (இறை) அச்சமுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.) அன்னஜ்மு 32.
(அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.)
அல்லாஹ் நாடியதைச் செய்யும் ஆற்றலுடையவன். அவன் செய்வதை யாராலும் தடுக்க முடியாது. அவனுக்கும் அவனது செயல்களுக்குமிடையில் இயலாமை என்ற திரைகிடையாது.அவன் நாடியவர்களுக்கு அருள் புரிவான், அவன் நாடியவர்களுக்குத் தண்டனை வழங்குவான்.
குறிப்பு:
மேற்கூறப்பட்ட வசனத்தில் யதுன்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு சிலர் ஆற்றல் அல்லது அருள் என விளக்கம் கூறுவார்கள். அதன் சரியான பொருள் கை என்பதாகும்.

அவர்கள் அவ்வாறு விளக்கம் கூறுவதற்கான காரணம், அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் கை இருக்கிறது. எனவே அல்லாஹ்வுக்கு கை இருப்பதாகக் கூறினால் அல்லாஹ்வுக்கும் மற்றவர்களுக்கும் ஒப்புவமை ஏற்பட்டுவிடும் என்று கூறி அவர்கள் முன்வைக்கும் ஆதாரம் பின்வரும் வசனமாகும்:
(அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்) அஷ்ஷுரா 11.
எனவே கை என்பதில் ஒப்புவமை ஏற்படுகிறது என்ற சந்தேகம் தான் அவர்கள் அவ்வாறு மாற்று விளக்கம் கூறுவதற்கான காரணமாகும். அதை சரியாகப் புரிந்து கொள்ள ஒரு விதியைக் கவனிப்போம்.

பெயர்களில் ஒப்புவமை ஏற்படுவது உருவமைப்பில் ஒப்புவமை ஏற்பட வேண்டுமென்ற அவசியம் கிடையாது”.

உதாரணம்: மனிதன், குருவி,யானை இவைகள் அனைத்திற்கும் கால்கள் உண்டு. ஆனால்,அம்மூன்று இனங்களினதும் கால்களுக்கிடையே பரந்த வித்தியாசம் இருப்பதைக் கவனிக்க முடிகிறது. இவைகள் அனைத்தும் கால்” என்ற பெயரில் ஒன்றுபட்டாலும் உருவமைப்பில் வித்தியாசப்படுவதைப் பார்க்கிறோம் எனவே படைப்பினங்களுக்கு மத்தியிலே இவ்வாறான வேறுபாடுகள் இருக்க முடியுமென்றிருந்தால் அல்லாஹ்வுக்கும் அவனல்லாதவற்றிற்கும் இடையே அதை விட பல வித்தியாசங்கள் ஏற்படும் என்பதை அறியலாம்.
மேலும் குர்ஆனில் யதுன்” என்ற வார்த்தை கூறப்பட்ட இடங்களில் கை” என்ற பொருளையே குறிக்கிறது என்பதற்கு பின்வரும் வசனம் மிகத் தெளிவாக அமைகிறது.
அல்லாஹ் கூறுகிறான்:
(எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது?) ஸாத் – 38:75.
யதுன்” என்ற வார்த்தைக்கு வல்லமை” என்று பொருள் கொடுப்பவர்கள் இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள “யதய்ய” என்ற வார்த்தைக்கு இரண்டு வல்லமைகள் என்ற பொருள் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள். அதன் மூலம் அல்லாஹ்வுக்கு ஒரு வல்லமை, இரண்டு வல்லமை இருப்பதாக சொல்ல வேண்டி ஏற்படும் அது அவனுக்கு பொருத்தமற்றதாகும்.
எனவே அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் அவனுக்கு என்ன பண்புகள் இருப்பதாகக் கூறியுள்ளார்களோ அவைகளுக்கு மாற்று விளக்கம் கூறாது அவ்வாறே ஏற்று கொள்ள அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!
தொடரும்……

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 43| ‘அல் முஹ்கமு’, ‘வல் முஃஹ்தலிஃபு’

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 43 | ‘அல் முஹ்கமு’, ‘வல் …

3 comments

  1. Assalamualaikum! May ALLAH reward you for this wonderful work! more than 1435 years passed after the revelation of holy quran! the whole translation (great tafseers) of this holy book is not available in tamil! and so many hadhith books are not available in tamil! because of this we have to face the ‘fithnas’made by the “scholars in the name of thowheed” May ALLAH pour HIS Blessings continuously on ‘ustads’ like you! Who found the correct treatment for the tamil muslim people!

Leave a Reply