Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 13

 وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوِ اجْهَرُوا بِهِ  ۖ  إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ ﴿١٣﴾ 
(உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! நிச்சயமாக உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்). அல்முல்க் – 13  
உள்ளங்களில் ஊசலாடுபவைகள் மேலும் கண் மூலம் செய்யப்படும் கெடுதிகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். இன்னும் அவன் அறிவில் இரகசியமும், பரகசியமும் சமமானதாகும் என்பதை விளங்கமுடிகிறது.
அல்லாஹ் கூறுகிறான்;
(உங்களில் இரகசியமாகப் பேசுபவனும், உரத்துப் பேசுபவனும், இரவில் மறைந்திருப்பவனும், பகலில் நடப்பவனும் (அவனைப் பொறுத்தவரை) சமமானோரே) அர் ரஃது – 10.
(தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்கள் இருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன், பார்ப்பவன்) அல் முஜாதலா – 1.

                                                                                                                          தொடரும்……

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply