﴿١٤﴾ أَلَا يَعْلَمُ مَنْ خَلَقَ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ
(படைத்தவன் அறியமாட்டானா? அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்). அல்முல்க் – 14
அல்லாஹ் படைப்பினங்களை அறியமாட்டானா? நிச்சயமாக படைத்தவன் எதைப் படைத்தான், எதிலிருந்து படைத்தான், அவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கிறது என்பதை நன்கறிவான்.
(அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்).
பின்பு அல்லாஹ் தனது படைப்பினங்களுக்கு அருளியுள்ள அருட்கொடைகளைக் கூறுகிறான். அவன் பூமியை வசப்படுத்தி ஆடாது,அசையாது அதன் மேல் மலைகளை நிறுவி வாழுமிடமாக ஆக்கியுள்ளான். அத்துடன் அதிலிருந்து நீரூற்றுக்களை வெளியாக்கி பயிர் செய்து பயன் பெறுமிடமாகவும் வைத்துள்ளான்.
குர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட