Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 20

(أَمَّنْ هَـٰذَا الَّذِي هُوَ جُندٌ لَّكُمْ يَنصُرُكُم مِّن دُونِ الرَّحْمَـٰنِ ۚ إِنِ الْكَافِرُونَ إِلَّا فِي غُرُورٍ (٢٠

 

(அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்). அல்முல்க் – 20  

இவ்வசனத்தில் அல்லாஹ் அவனுடன், அவனல்லாதவர்களை வணங்கும் முஷ்ரிக்கீன்களுக்கு (இணைவைப்பாளர்களுக்கு) பதிலடி கொடுக்கிறான்.
அவர்கள் இவர்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள். எனவே அவர்களை எதிர்பார்ப்பது தவறான கொள்கையாகும். அல்லாஹ்வைத் தவிர வேறுயாரும் உங்களுக்கு உணவளிக்கவும் மாட்டார்கள், உதவி செய்யவும் மாட்டார்கள்.
மேலும், அல்லாஹ் உங்களுக்குத் தீங்கு செய்ய நாடினால் அதிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் படையினர் யார்? எனவே நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் ஏமாற்றத்தில் சிக்கிக்கொண்டு, அவனே இவர்களுக்கு அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கும் படியும், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்வார்கள், பாதுகாப்பு வழங்குவார்கள், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறியும் மோசடி செய்துவிட்டான்.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 67 |الحديث الموقوف அல் ஹதீஸ் அல் மவ்கூஃப்

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 67 | الحديث الموقوف அல் …

Leave a Reply