(أَمَّنْ هَـٰذَا الَّذِي يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَهُ ۚ بَل لَّجُّوا فِي عُتُوٍّ وَنُفُورٍ(٢١
(அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கிவிட்டனர்) அல்முல்க் – 21
அவன் தனது உணவை நிறுத்திக் கொண்டால் யாராலும் உணவு வழங்க முடியாது. அதாவது, அல்லாஹ்வையன்றி யாராலும் கொடுக்கவும் முடியாது, கொடுப்பதை தடுக்கவும் முடியாது, மேலும் படைக்கவும் முடியாது, உதவி செய்யவும் முடியாது என அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்குகிறார்கள். எனவே அவர்கள் தங்களது வழிகேட்டிலும், வரம்பு மீறுவதிலும் நிலைத்திருக்கிறார்கள். உண்மையை செவியுறவும் மாட்டார்கள் அதனைப் பின்பற்றவும் மாட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(‘வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?” என்று (முஹம்மதே) கேட்டு, ‘அல்லாஹ்” என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்) ஸபாஃ – 24.
மேலும் கூறுகிறான்:
(மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப்பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான்;. அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?) ஃபாத்திர் – 3.
(அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்). அர்ரூம் – 40
அல்லாஹ் மாத்திரம் தான் உணவளிக்கிறான் என்பதற்கு அல்குர்ஆனில் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அவைகளில் சில பின்வருமாறு: