﴿١٨﴾ وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرِ
(அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யெனக் கருதினர். எனது பதிலடி எவ்வாறு இருந்தது?). அல்முல்க் – 18
முன்சென்ற சமுதாயத்திற்கான எனது பதிலடி எவ்வாறு இருந்ததெனில் மிகக் கடுமையானதாகவும், நோவினையுடையதாகவும் இருந்தது.
أَوَلَمْ يَرَوْا إِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صَافَّاتٍ وَيَقْبِضْنَ ۚ مَا يُمْسِكُهُنَّ إِلَّا الرَّحْمَـٰنُ ۚ
إِنَّهُ بِكُلِّ شَيْءٍ بَصِيرٌ﴿١٩﴾
(அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்). அல்முல்க் – 19
பறவைகள் சில தடவைகள் தமது இறக்கைகளை விரிக்கின்றன, சில தடவைகள் மடக்குகின்றன. இவ்வாறு செய்வதற்கு ஆகாயத்தை வசப்படுத்தியது அல்லாஹ்வின் அருளும், கிருபையுமாகும். மேலும் இவ்வாறு நடப்பது அவனது வல்லமையும், அவனது படைப்பினங்களுக்கு ஒரு அத்தாட்சியுமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன) அந் நஹ்ல் – 79