﴾67:26﴿ قُلْ إِنَّمَا الْعِلْمُ عِندَ اللَّـهِ وَإِنَّمَا أَنَا نَذِيرٌ مُّبِينٌ
(நிச்சயமாக அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 26
அந்நிகழ்வுகள் எப்போது நிகழும் என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் நிச்சயமாக அறியமாட்டார்கள். எனினும்; அவைகள் சந்தேகமின்றி நிகழும் என்பதை உங்களுக்கு அறிவிக்கும் படி அவன் எனக்குக் கட்டளையிட்டான்.
(நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே).
உங்களுக்கு எத்திவைப்பது தான் எனது கடமை. அதை நான் நிறைவேற்றி விட்டேன்.
இவ்வசனத்தில் ‘அந்த அறிவு” அல்லாஹ்விடமே உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. அறிவு என்பதைக் கொண்டு இவ்விடத்தில் நாடப்படுவது கியாமநாள் பற்றிய அறிவும், வேதனை இறங்கும் காலமும் ஆகும்.