Home / Uncategorized / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 22

(أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَىٰ وَجْهِهِ أَهْدَىٰ أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ (22

(முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர் வழிப்பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவன் நேர் வழிப்பெற்றவனா?) அல்முல்க் – 22  

இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களுக்கும், காஃபிர்களுக்கும் ஓர் உதாரணத்தைக் கூறுகிறான். காஃபிர் முகங்குப்புற கிடப்பவனைப் போன்று. அவனால் நிமிர்ந்து நடக்கமுடியாது. மேலும் எங்கு செல்வதென்பதும் அவனுக்குத் தெரியாது. இவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் நிமிர்ந்து நடப்பவன் நேர்வழி பெற்றவனா? இதுவே இவர்களுக்கு இவ்வுலகிலும், மறுவுலகிலும் உதாரணமாகும். ஆனால், முஃமின் மறுமையில் எழுப்பப்பட்டால் சுவர்க்கத்தை நோக்கி நேராக நடப்பான். காஃபிர் மறுமையில் எழுப்பப்பட்டால் நரகத்தை நோக்கியவனாக முகங்குப்புற நடப்பான்.

அல்லாஹ் கூறுகிறான்:

(அநீதி இழைத்தோரையும், அவர்களுக்குத் துணை நின்றவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி வந்ததையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையைக் காட்டுங்கள்!).

அஸ் ஸாஃப்பாத் – 22,23.

 

நபி (ஸல்) அவர்களிடம் மறுமையில் மக்கள் எவ்வாறு முகங்குப்புற நடப்பார்கள் என வினவப்பட்டதற்கு, அவர்களைக் காலால் நடக்க வைத்த இறைவன் முகங்குப்புற நடக்கவைக்க ஆற்றல் பெறமாட்டானா? என பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரழி).

                                  நூல் : அஹ்மத்.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply