قُلْ هُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ ﴿٢٤﴾
(அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!). அல்முல்க் – 24
அவனே உங்களைப் பூமியில் பல பாகங்களில் பரவச் செய்தான். நீங்கள் மொழியால், நிறத்தால், தோற்றத்தால் வேறுபட்டவர்களாக இருக்கிறீர்கள்.
(ஒன்று திரட்டப் படுவீர்கள்).
இவ்வாறு பிரிந்து சென்றபின் அவனே உங்களை ஒன்று சேர்க்கிறான். எவ்வாறு பரவச் செய்தானோ அவ்வாறு அவன் ஒன்று சேர்ப்பான். மேலும் எவ்வாறு படைத்தானோ அவ்வாறு அவன் மீட்டியெடுப்பான். பரவச் செய்தபின் ஒன்று சேர்ப்பதாக நீங்கள் கூறுகிறீர்கள். அது எப்போது நடக்குமென்பதை எங்களுக்குச் சொல்லுங்கள் என காஃபிர்கள் கேட்கிறார்கள்.