Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 25

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 25

          وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ ﴿٢٥﴾
 (‘நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?” எனக் கேட்கின்றனர்). அல்முல்க் – 25 
மறுமை நாள் நிகழமாட்டாது எனக்கூறியும்,  நபிமார்களுக்கு சவாலாகவும்; காஃபிர்கள் வேதனையை அவசரமாக வேண்டி நின்றார்கள். இது பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறுகிறான்:
         1.      (‘எங்கள் இறைவா! விசாரிக்கப்படும் நாளுக்கு முன்பே
எங்கள் பங்கை (இவ்வுலகில்) விரைந்து வழங்கி விடு” என்று கேட்கின்றனர்).
 ஸாத்-16.
       2.      (‘அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையாக இருந்தால்
எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழையைப் பொழியச் செய்வாயாக! அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தருவாயாக” என்று அவர்கள் கூறியதை எண்ணிப் பாருங்கள்!).
 அல் அன்ஃபால்-32.
      3.      (‘நீங்கள் உண்மையாளராக இருந்தால் இந்த எச்சரிக்கை எப்போது (நிகழும்)” என்று கேட்கின்றனர்). அல் அன்பியா–38.
      4.     (வேதனையை உம்மிடத்தில் அவசரமாகத் தேடுகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட
காலக்கெடு இல்லாதிருந்தால் வேதனை அவர்களுக்கு வந்திருக்கும். அவர்கள் உணராத நிலையில் திடீரென அது அவர்களிடம் வரும்).
 அல் அன்கபூத்-53.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply