Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 4

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴿٤﴾  
(இரு தடவை உன் பார்வையைச் செலுத்து! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.) அல்முல்க் – 4  
(இரு தடவை உன் பார்வையைச் செலுத்து!)
மீண்டும் மீண்டும் உன் பார்வையை மீட்டிப்பார்! நீ உறுதி கொள்வதற்காக எத்தனை தடவை உன் பார்வையை மீட்டிப் பார்த்தாலும் அதில் எவ்வித குறைகளையோ, ஏற்றத் தாழ்வுகளையோ, பிளவுகளையோ காணமாட்டாய்.
(களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.)
சிரமத்திற்கு மேல் சிரமம் கொண்டு நீ ஆய்வு செய்தாலும், எவ்விதக் குறையையும் காணாது உனது பார்வை இழிவான நிலையில் திரும்பி விடும்.
அல்லாஹ் தனது அடியானுக்கு இரண்டு தடவை பார்வையை மீட்டிப் பார்க்கும்படி கூறியிருப்பதற்கான காரணம், வானங்களில் எவ்வித குறைகளும், பிளவுகளும் இல்லை என்பதை உறுதிப் படுத்துவதற்காகவே. அதற்கு ஆதாரமாக பின்வரும் வசனத்தை எடுத்துக் கொள்ளலாம்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை). காஃப் – 6.
தற்பொழுது வானத்தில் எவ்வித ஓட்டைகளோ, பிளவுகளோ கிடையாது. ஆனால் மறுமை நாளின் போது மேற்கூறப்பட்ட விடயங்கள் ஏற்படுமென்பதை பல வசனங்களில் அல்லாஹ் கூறியிருக்கின்றான். அவைகளாவன:
           (வானம் பிளந்து விடும் போது,) அல் இன்ஷிகாக் -1.
•           ((அது) மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு , வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள்;!) அல் ஃபுர்கான் – 25.
•           ((ஏக இறைவனை) நீங்கள் மறுத்தால் குழந்தைகளை நரைத்தோராக மாற்றும் நாளில் எவ்வாறு தப்பிப்பீர்கள்? அதில் வானம் வெடித்து விடும்) அல் முஸ்ஸம்மில் -17 & 18.
•           (நட்சத்திரங்கள் ஒளியிழக்கும் போது,  வானம் பிளக்கப்படும் போது) அல் முர்ஸலாத் – 8 & 9.
•           (வானம் பிளக்கும் போது எண்ணெய்யைப் போல் சிவந்ததாக ஆகும்.) அர்ரஹ்மான் -37.
எனவே மேற்கூறப்பட்ட வசனங்களின் அடிப்படையில், கியாம நாளில் வானங்களில் பிளவுகள், வெடிப்புகள் ஏற்படுமென்பதையும் இவ்வுலகில் அவ்வாறான நிகழ்வுகள் வானத்தில் நடைபெறாது என்பதையும் மென்மேலும் உறுதிப்படுத்துகின்றன. ஆகையால் எத்தனை தடவைகள் தான் பார்த்தாலும் வானத்தில் குறைகளைக் காணமுடியாது.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply