بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
“சிறிய ஹதீஸ்கள் மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 6
عَنْ عَبْدِاللهِ بْنِ مَسْعُوْدٍ؛ قَالَ:
قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “سِبَابُ الْمُسْلِمِ فُسُوْقٌ. وَقِتَالُهُ كُفْرٌ”
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்”
அறிவிப்பவர் : இன்னு மஸ்ஊத் (ரலி). ஆதாரம் : முஸ்லிம் 116.
ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை…
سِبَابُ الْمُسْلِمِ
|
فُسُوْقٌ
|
وَقِتَالُهُ
|
كُفْرٌ
|
முஸ்லிமை ஏசுவது
|
பாவமாகும்
|
அவனுடன் போரிடுவது
|
இறைமறுப்பு
|
ஹதிஸ் அறிவிப்பாளர்:
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நபித்தோழர்களில் மிகத் திறமையாக அல்குர்ஆனை பாராயணம் செய்யக் கூடியவர். கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் கூபாவிற்கு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க அனுப்பப்பட்டார். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் கூபாவிற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். ஹிஜ்ரி 32 ம் ஆண்டு மதீனாவில் மரணித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.