“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 2
عَنْ أَبي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ،
عَنْ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا أَسْفَلَ مِن الْكَعْبَيْنِ مِن الْإِزَارِ فَفِي النَّارِ
(صحيح البخاري- 5787)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்)
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி). ஆதாரம் : புஹாரி 5787.
ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை…
مَا أَسْفَلَ
|
الْكَعْبَيْنِ
|
الْإِزَارِ
|
فَفِي النَّارِ
|
கீழே தொங்கும் (ஆடை)
|
இரண்டு கணுக்கால்
|
கீழங்கி / கீழ் ஆடை
|
நரகத்தில்
|
ஹதிஸ் அறிவிப்பாளர்:
அபூ ஹுரைரா (ரலி) என்பது இவரின் புனைப்பெயராகும் அவரின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் ஸக்ர் ஆகும். ஹிஜ்ரி 7ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றார். பின்னர் தொடர்ந்து 4 வருடங்கள் நபிகளாருடனே இருந்தார்கள், இதனால் நபிகளாரைத் தொட்டும் 5374 ஹதீஸ்களை அறிவித்து நபித்தோழர்களில் மிகக் கூடுதலான நபிமொழிகளை அறிந்தவர் என்ற பெயருக்கு சொந்தமானார். ஹிஜ்ரி 57ம் ஆண்டு மதீனாவில் மரித்து பகீஉல் கர்கதில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
1) 1) கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கிகளை அணிவதனை இந்த நபிமொழி வன்மையாக கண்டிக்கின்றது. இந்த தடை ஆண்களுக்கு மாத்திரமாகும்.
2) 2) இஸ்லாத்தின் ஆடை ஒழுங்குகளுக்கு ஏற்ப ஒரு முஸ்லிமின் ஆடை அமையவேண்டும்.
3) 3) கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கிகளை அணிவதனை தவிர்ப்பது அவசியமாகும். அது நரகத்திற்கு நுழைவதற்கான ஒரு காரணமாகும்.
Alhandulillah!