“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 3
عَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
” اَلْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ”.
(صحيح مسلم 65)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி). ஆதாரம் : முஸ்லிம் 65.
ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை…
اَلْمُسْلِمُ
|
مَنْ
|
سَلِمَ
|
الْمُسْلِمُونَ
|
முஸ்லிம்
|
யார்
|
பாதுகாப்பு பெற்றான்
|
முஸ்லிம்கள்
|
مِنْ
|
لِسَانِهِ
|
وَ
|
يَدِهِ
|
இருந்து
|
அவனுடைய நாவு
|
மேலும்
|
அவனுடைய கை
|
ஹதிஸ் அறிவிப்பாளர்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அகபா உடன்படிக்கை நடைபெற்ற இரவு இஸ்லாத்தை ஏற்றார். நபிகளாரைத் தொட்டும் 1540 நபி மொழிகளை அறிவித்த இவர் ஹிஜ்ரி 73ம் ஆண்டு மரணமடைந்தார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
1) எந்த விதத்திலும் மற்ற மக்களை துன்புறுத்துவதிலிருந்து தவிர்ந்து நடக்க வேண்டும்.
2) ஒரு முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமை கண்ணியப்படுத்துவதும் அவனை நேசிப்பதும் அவனுக்கு உதவி செய்வதும் அவசியமாகும்.
3) எவனுடைய சொல், செயல் மற்றும் நடத்தை என்பவற்றிலிருந்து மற்றவர்கள் துன்புற வில்லையோ அவனே முஸ்லிம்களில் சிறந்தவனாவான்.
Assalamu alaikum! very good effort! jazakallahu khair! very easy to recite and byheart!