بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
“சிறிய ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்வதற்காக” – ஹதிஸ் எண் 1
அஸ்ஸலாமு அலைக்கும் வ-ரஹ்மத்துல்லாஹி வ-பரக்காத்துஹூ.
அன்புள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகளே!
ஹதீஸ்களை மனனம் செய்வதற்காக 50 சிறிய ஹதீஸ்களை தேர்ந்தெடுத்து அதன் அறிவிப்பாளர்கள் பற்றிய சிறுகுறிப்புகள் மற்றும் சிறு விளக்கங்களுடன் படித்து பயன் பெறுவதற்காக தொகுத்து வழங்குகிறோம்.
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ:
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، وَإِقَامِ الصَّلَاةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ (صحيح البخاري- 8)
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஜகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி). நூல் : புஹாரி 8
ஹதீஸ்கள் வார்த்தைக்கு வார்த்தை…
بُنِيَ
|
الْإِسْلَام
|
عَلَى
|
خَمْسٍ
|
நிறுவப்பட்டுள்ளது
|
இஸ்லாம்
|
மீது
|
ஐந்து
|
شَهَادَةِ
|
أَنْ لَا إِلَهَ
|
إِلَّا اللهُ
|
உறுதியாக நம்புதல் / சான்று பகருதல்
|
வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை
|
அல்லாஹ்வையன்றி
|
أَنَّ مُحَمَّدًا
|
رَسُولُ اللهِ
|
وَ
|
إِقَامِ
|
الصَّلَاةِ
|
وَ
|
முஹம்மத்
|
இறைத்தூதர்
|
மேலும்
|
நிலை நிறுத்துதல்
|
தொழுகை
|
மேலும்
|
إِيتَاءِ
|
الزَّكَاةِ
|
وَالْحَجِّ
|
وَصَوْمِ
|
رَمَضَانَ
|
வழங்குதல்
|
ஜகாத்
|
ஹஜ் செய்தல்
|
நோன்பு நோற்றல்
|
ரமலான் மாதம்
|
ஹதீஸ் அறிவிப்பாளர் பற்றி சிறுகுறிப்பு :
அப்துல்லாஹ் பின் உமர் பின் கத்தாப் (ரலி) இவர் தன் தந்தையுடனே இஸ்லாத்தை ஏற்று மதினாவிற்கு ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டவர். கந்தக் யுத்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து யுத்தங்களிலும் கலந்து கொண்டார். சுன்னாவைப் பற்றிப்பிடிப்பதில் முன்னுதாரணம் கூறப்பட்டவர், நபிகளாரைத் தொட்டும் 2630 ஹதீஸ்களை அறிவித்திருக்கின்றார். தனது 86ம் வயதில் ஹிஜ்ரி 73ம் ஆண்டு மரணமடைந்தார்.
ஹதீஸிலிருந்து பெறப்பட்ட பாடங்கள்:
இரு ஷஹாதாக் கலிமாக்களையும் மொழிந்து அதனை ஏற்றால் தொழுகையை நிலை நிறுத்துதல், ஜகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமழானில் நோன்பு நோற்றல், ஆகிய காரியங்களையும் ஏற்று நடத்தல் வேண்டும்.
please correct the spelling mistakes and published again.
corrected…جزاك الله خيرا
jazakallah khaira, very useful for us
Alhamdulillah
Memorized
May allah bless u all those who are involved in this work!
Alhamdullillah , barakkallah very very use full people like me
once i download the link i got only 2 hadees, and 2nd one there is no word by word