23வது படிப்பினை
அல்லாஹ்வின் பாதையில் தியாகம் மேற்கொள்ளல் நலவிற்குக் காரணியாகும்.
{مِنْ سَبَإٍ} [النمل: 22 ஸபஇலிருந்து
ஸபஃ நகரம் ஸுலைமான் (அலை) அவர்களது ஆட்சியின் எல்லைக்கப்பால் இருந்ததனால் அங்கு சென்று திரும்புவதில் பெரும் சிரமத்தை ஹுத்ஹுத் எதிர்க்கொண்டது. அது ஸபஇற்குப் பறந்து சென்று திரும்பிய பின் மீண்டும் ஸுலைமான் (அலை) அவர்களது கடிதத்தை எடுத்துக் கொண்டு பல்கீஸிடம் சென்று திரும்பி அந்த நீண்ட தூரத்தைக் கடந்து சென்று அதற்காக செய்த தியாகமே அதனது உயர்வுக்கும் பல்கீஸுடையவும் அவளது கூட்டத்தினதும் நேர்வழிக்கும் காரணமாக அமைந்தது. இதன் மூலம் உண்மையின் பக்கம் மக்களை அழைத்தல், நேர்வழியைக் காட்டிவிடும் பாதையில் சிரமங்களைச் சகித்துக் கொள்ள ஆர்வமூட்டப்பட்டுள்ளது. இத்தியாகங்களே நலவிற்கு
வழிவகுக்கும்.
இது நபி (ஸல்) அவர்களதும் அவர்களது தோழர்களதும் தியாகங்களை நினைவூட்டுகிறது. நபி (ஸல்) அவர் கள் தாஇப் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்குமுகமாக தாஇபிற்கு நடந்து சென்றுள்ளார்கள். மேலும் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்களை நபியவர்கள் மதீனாவிற்குத் தூதுவராக அனுப்பினார்கள். மதீனத்து மக்கள் இஸ்லாத்தில் நுழைந்து மனிதகுலத் தலைவர் (ஸல்) அவர்களுக்கு உதவி செய்வதற்கு அல்லாஹ் அவர்களை காரணமாக ஆக்கும் வரை ஒரு வருடம் பூரணமாக அங்கு அவர்கள்
தங்கியிருந்தார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: எங்களுடைய விடயத்தில் தியாகம் செய்கிறார்களே அவர்களுக்கு நிச்சயமாக நாம் எமது பாதைகளுக்கு வழிகாட்டுவோம். மேலும் அல்லாஹ் நிச்சயமாக உபகாரிகளுடனே இருக்கிறான்.))
(அல்அன்கபூ த்:69)
அல்லாஹ்தஆலா யாஸீன் ஸூராவில் வரும் அந்த மனிதரின் தியாகத்தைக் குறிப்பிடுகிறான். ((பட்டினத்தின் ஒரு கோடியிலிருந்து ஒரு மனிதர்விரைந்து வந்து கூறினார்: எனது கூட்டமே! இத் தூதுவர்களைப் பின்பற்றுங்கள்.))
(யாஸீன்:20)
தொடரும்……