Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

அத்தியாயம் 84 அல்இன்ஷிகாக் ( பிளந்துவிடுதல்) வசனங்கள் 25

بسم الله الرحمن الرحيم
 
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால்
 
إِذَا السَّمَاءُ انشَقَّتْ ﴿١ 
 
1) வானம் பிளந்துவிடும் போது 
 
إِذَا
السَّمَاءُ
انشَقَّتْ
போது
வானம்
பிளந்துவிடும்
 
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢
 
2) தனது இறைவனுக்கு பணிந்த(போது). இன்னும் அது கட்டாயமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது,- 
 
وَأَذِنَتْ
لِرَبِّهَا
وَ
حُقَّتْ
அது பணிந்தது
தனது இறைவனுக்கு
இன்னும்
அது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது
 
 
 وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ﴿٣
 
3), பூமி நீட்டப்படும்போது,
 
وَ
إِذَا
الْأَرْضُ
مُدَّتْ
இன்னும்
போது
பூமி
நீட்டப்படும்
 
 وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤ 
 
4) இன்னும் அது, தன்னிலுள்ளவற்றை வெளியாக்கி, அது காலியாகிவிடும் (போது)
 
وَتَخَلَّتْ
مَا فِيهَا
وَأَلْقَتْ
காலியாகிவிட்டது
தன்னிலுள்ளவற்றை
வெளியாக்கிது
 
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ﴿٥
 
5) இன்னும் அது தனது இறைவனுக்கு பணிந்தது. இன்னும் அது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது . 
 
وَأَذِنَتْ
لِرَبِّهَا
وَحُقَّتْ
பணிந்தது
தனது இறைவனுக்கு
இன்னும் அது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது
 
 يَا أَيُّهَا الْإِنسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ﴿٦
 
6) மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவனை அடைய முனைந்து உழைப்பவனாக இருக்கின்றாய்- எனவே அவனைச் சந்திப்பவனாக இருக்கின்றாய்.
 
يَا أَيُّهَا الْإِنسَانُ
إِنَّكَ
كَادِحٌ
மனிதனே!
நிச்சயமாக நீ
முனைந்து உழைப்பவன்
 
كَدْحًا
إِلَىٰ رَبِّكَ
فَمُلَاقِيهِ
முனைவு, முயற்சி
உன் இறைவன் பால்
அவனைச் சந்திப்பவன்
 
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ﴿٧
 
7) ஆகவே எவனுடைய பட்டோலை அவனுடைய வலக் கையில் கொடுக்கப்படுகின்றதோ,
 
فَأَمَّا مَنْ
أُوتِيَ
எனவே எவர்
கொடுக்கப்பட்டார்
 
كِتَابَهُ
بِيَمِينِهِ
அவனுடைய பட்டோலை
அவனது வலக்கையில்
 
 فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا﴿٨ 
 
8) அவன் சுலபமான விசாரணையாக விசாரிக்கப்படுவான். 
 
فَسَوْفَ يُحَاسَبُ
حِسَابًا
يَسِيرًا
அவன் விசாரிக்கப்படுவான்
விசாரணை
சுலபமான
 
وَيَنقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا ﴿٩
 
9) இன்னும், தன்னைச் சார்ந்தோரிடம் மகிழ்வுடன் திரும்புவான். 
 
وَيَنقَلِبُ
إِلىٰ أَهْلِهِ
مَسْرُورًا
திரும்புவான்
தன்குடும்பத்தாரிடம்
மகிழ்வுடன்
 
 وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ﴿١٠
 
10) ஆனால், எவனுடைய பட்டோலைஅவனுடையமுதுகுக்குப்பின்னால்கொடுக்கப்படுகின்றதோ-
 
وَأَمَّا مَنْ
أُوتِيَ
بِيَمِينِهِ
எனவே எவர்
கொடுக்கப்பட்டார்
அவனது இடக்கையில்
 
كِتَابَهُ
وَرَاءَ
ظَهْرِهِ
அவனுடைய பட்டோலை
பின்னால்
அவன் முதுகு
 
 
 فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ﴿١١ 
 
11) அவன் (தனகக்கு) அழிவை அழைப்பான்-
 
فَسَوْفَ يَدْعُو
ثُبُورًا
அவன் அழைப்பான்
அழிவு
 
 
وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢
 
12) அவன் நரகத்தில் கருகுவான்.
 
وَيَصْلَىٰ
سَعِيرًا
கருகுவான்
நரகில்
 
 
 إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ﴿١٣
 
13) நிச்சயமாக அவன் (இம்மையில்) தன்னைச் சார்ந்தோருடன் மகிழ்வோடு இருந்தான். 
 
إِنَّهُ
كَانَ
فِي أَهْلِهِ
مَسْرُورًا
நிச்சயம் அவன்
இருந்தான்
தன்குடும்பத்தாரிடம்
மகிழ்வுடன்
 
 
 إِنَّهُ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤ 
 
14) நிச்சயமாக, தான் (இறைவன் பால்) “மீளவே மாட்டேன்” என்று எண்ணியிருந்தான்.
 
إِنَّهُ
ظَنَّ
أَن لَّن يَحُورَ
நிச்சயம் அவன்
எண்ணினான்
நிச்சயமாக, தான் மீள மாட்டான்
 
 
بَلَىٰ إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ﴿١٥
 
15) அப்படியல்ல, நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனைக் கவனித்து நோக்குகிறவனாகவே இருந்தான். 
 
بَلَىٰ
إِنَّ
رَبَّهُ
அப்படியல்ல
நிச்சயம்
அவனுடைய இறைவன்
 
كَانَ
بِهِ بَصِيرًا
இருந்தான்
அவனை நோக்குகிறவனாக
 
 
 فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ﴿١٦
 
16) இன்னும், அந்திச் செவ்வானத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
 
فَلَا أُقْسِمُ
بِالشَّفَقِ
சத்தியம் செய்கின்றேன்
செவ்வானத்தின் மீது
 
 
 وَاللَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧
 
17) மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும்
 
وَاللَّيْلِ
وَمَا وَسَقَ
மேலும்இரவின் மீதும்
அது ஒன்று சேர்த்துக் கொண்டவற்றின் மீதும்
 
 
 وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ﴿١٨
 
18) பூரணமடைந்த சந்திரன் மீதும்(சத்தியம் செய்கின்றேன்)
 
وَالْقَمَرِ
إِذَا اتَّسَقَ
சந்திரன் மீதும்
பூரணமடைந்த போது
 
 
 لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ﴿١٩
 
19) நீங்கள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு நிச்சயமாக ஏறிப்போவீர்கள்.
 
لَتَرْكَبُنَّ
طَبَقًا
عَن طَبَقٍ
நிச்சயமாக ஏறிப்போவீர்கள்
நிலைக்கு
ஒரு நிலையிலிருந்து
 
 
 
 فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠
 
20) எனவே, அவர்களுக்கு என்ன (நேர்ந்தது?) அவர்கள் ஈமான் கொள்வதில்லை
 
فَمَا لَهُمْ
لَا يُؤْمِنُونَ
அவர்களுக்கு என்ன
அவர்கள் ஈமான் கொள்வதில்லை
 
 
 وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١
 
21) மேலும், அவர்களிடத்தில் குர்ஆன் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.  
 
وَإِذَا قُرِئَ
عَلَيْهِمُ الْقُرْآنُ
لَا يَسْجُدُونَ
குர்ஆன் ஓதப்பட்டால்
அவர்கள்  மீது
அவர்கள் ஸுஜூது செய்வதில்லை.
 
 بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ﴿٢٢
 
22) அன்றியும் நிராகரிப்பவர்கள் அதைப் பொய்ப்பிக்கின்றனர்.
 
بَلِ
الَّذِينَ كَفَرُوا
يُكَذِّبُونَ
என்றாலும்
நிராகரித்தார்களே அவர்கள்
பொய்ப்பிக்கின்றனர்
 
 وَاللَّـهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣ 
 
23) ஆனால் அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பவற்றை நன்கு அறிந்திருக்கின்றான்.
 
وَاللَّـهُ أَعْلَمُ
بِمَا يُوعُونَ
அல்லாஹ் நன்கு அறிந்திருக்கின்றான்
மறைத்து வைத்திருப்பவற்றை
 
 
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤
 
24) (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையைக் கொண்டு நன்மாராயங்கூறுவீராக.  
 
فَبَشِّرْهُم
بِعَذَابٍ
أَلِيمٍ
அவர்களுக்கு நன்மாராயங் கூறுவீராக
வேதனையைக் கொண்டு
நோவினை தரும்
 
 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٢٥
 
25) எவர்கள் ஈமான்கொண்டு, நல்லவைகளைச் செய்கிறார்களோ அவர்களைத் தவிர- அவர்களுக்கு முடிவேயில்லாத நற்கூலி உண்டு.
 
إِلَّا الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ
ஈமான்கொண்டார்களே அவர்களைத் தவிர
நல்லவைகளைச்  செய்தார்கள்
 
 
لَهُمْ
أَجْرٌ
غَيْرُ مَمْنُونٍ
அவர்களுக்கு
நற்கூலி
முடிவேயில்லாத
 
 
 

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

  1. Very Very Useful in this period. I too had been anxiously awaiting for this kind of Service.Jazakallhu Khairan.

    Mohamed Sameen Jeinulabdeen
    Polgahawela, Sri Lanka.

Leave a Reply