Home / FIQH / இஸ்லாமிய புதுவருடத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?

இஸ்லாமிய புதுவருடத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?

இஸ்லாமிய புதுவருடத்திற்காக வாழ்த்துக்கள் தெரிவிக்கலாமா?
 
வாழ்த்துக்கள் தெரிவிப்பதென்பது ஒரு முஸ்லிமை பொறுத்த வரை பிரதான இரு காரணிகளுக்காக மாத்திரமே இருக்க வேண்டும்.
1)சந்தோஷம் கிடைத்தல்.
2)துன்பம் நீங்கள்.
உதாரணமாக திருமண வாழ்த்து, கல்வி முன்னேற்றத்திற்காக வாழ்த்து இது போன்ற குறிப்பிட்ட ஏதோ ஒரு காலத்தோடு, நேரத்தோடு தொடர்பு இல்லாத விடையங்களுக்கு வாழ்த்து கூறுவது இஸ்லாமிய பார்வையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
 
ஆனால் குறித்த காலத்துடன், நேரத்துடன் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு வாழ்த்து கூறுவதென்பது, இவற்றை நாம் பல வகையாக நோக்கலாம்.
1. பெருநாள் வாழ்த்து ( இது இஸ்லாமிய பார்வையில் அனுமதிக்கப்பட்டது).
2. மாதத்தோடு சம்பந்தமான (ரமழான்) வாழ்த்து, இதில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
3. நாட்களுடன் சம்பந்தப்பட்ட (மிஃராஜ், பிறந்த நாள்) வாழ்த்து, இவைகள் பித்அத் ஆகும்.
4. வருடத்துடன் சம்பந்தப்பட்ட வாழ்த்துக்கள்.
 
முதலாவது இலக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெருநாட்கள் மாத்திரம் ஹதீஸிலிருந்தும் ஸஹாபாக்களின் வாழ்க்கையிலிருந்தும் பெறப்பட்டவையாகும். ஏனையவைகளை பொருத்த வரை “இஸ்லாமிய சட்ட அமுலாக்கத்தின் காலம்” என வர்ணிக்கப்படும் அச்சிறந்த கால மக்களால் பேசப்படவே இல்லை.
 
புதுவருட வாழ்த்து தெரிவிப்பது சம்பந்தமான கருத்து வேறுபாடுகள்::
1• வாழ்த்து கூறுவது அனுமதிக்கப்பட்டதாகும், ஏனெனில் இது மனிதனின் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடையமாகும். இக்கருத்தையே அஷ்-ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்களின் ஒரு தீர்ப்பில் காணமுடிகின்றது, அவர்கள் இது தொடர்பாக இரு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அ) புதுவருடத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள் பறிமாற்றம் செய்யலாம், ஆனால் அதை மார்க்கத்தில் ஓர் அம்சம் என கூறிவிட முடியாது. இது வணக்கத்துடன் தொடர்பு படாத காரணத்தினால் இஸ்லாத்தின் பார்வையில் அனுமதிக்கப்பட்டது என கூறலாம். ஆ) யாராவது ஒருவர் உங்களுக்கு வாழ்த்து கூறினால் அவருக்கு பதில் வாழ்த்து கூறலாம், ஆனால் நாமாக முன்வந்து வாழ்த்தை ஆரம்பிக்க்கூடாது.
2• பொதுவான தடைவிதிக்கப்பட்ட ஒன்றாகும்,(இதுவே சரியான கருத்துமாகும்).
அஷ்-ஷெய்ஹ் ஸாலிஹ் பௌஸான் (ரஹ்) குறிப்பிடுவதாவது; இந்த வாழ்த்து முறைமைக்கு இஸ்லாமிய மார்க்க சட்டம் எடுப்பதற்கு தகுதியான காலமாக கருதப்படும் “இஸ்லாமிய சட்ட அமுலாக்கத்தின் காலம்”(ஆரம்ப  மூன்று நூற்றாண்டுகள்) காலத்தில் எவ்வித அடிப்படையும் கிடையாது. ஹிஜ்ரி வருடக்கணிப்பு என்பது வாழ்த்துக்கள் பறிமாறிக்கொள்ள உறுவாக்கப்பட்டதல்ல, உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களுக்கு வரும் கடிதத்தில் காலம் குறிப்பிடப்படாமையினால் ஏற்பட்ட சிக்கலை நிவர்த்தி செய்ய சில ஸஹாபாக்களின் ஆலோசனையின் பேரில் உறுவாக்கபலபட்ட ஒன்றாகும்.
 
இரண்டாம் தரப்பினரும் வாதங்களாவன;
1- வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளை மையமாக வைத்து வாழ்த்துக்கள் கூறப்படுகிப்றன. எனவே இது பெருநாள் வாழ்த்துக்கு ஒப்பாகிறது.
2- யூத, கிருஸ்தவர்களுக்கு அவர்களின் புதுவருட கொண்டாட்டத்தில் ஒப்பாகிறது.
3- புதுவருட வாழ்த்துக்களை அனுமதித்தால் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்கும் அது வழிவகுக்கும்.
4- அனுமதி வழங்குவதால் தொடர்பு ஊடகங்கள், சாதனங்களில் வாழ்த்துக்கள் பறிமாறப்பட்டு, இதுவே மக்களுக்கு பழக்கமானதாக மாறி, கொண்டாட்டங்களில் ஈடுபடவும், உத்தியோகப் பூர்வ விடுமுறை வழங்கவும் வாய்ப்புள்ளது. (இச்செயல் சில நாடுகளில் இன்றைய கலாச்சாரமாக நடைமுறையில் காணமுடியும்).
5- நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல வாழ்த்துக்கள் பறிமாறுவதற்கு சந்தோசமான நிகழ்வு அல்லது துன்பம் நீங்குதல் போன்ற காரணிகள் இருக்க வேண்டும். மனித வாழ்வில் ஒரு வருடம் குறைவதால் சந்தோசம் ஏற்படப்போவதில்லை, மாறாக வயது அதிகரிக்க அதிகரிக்க முதுமையை நோக்கிச் செல்வதால் கவலை தான் ஏற்படப்போகிறது.
 
எனவே தான் உலமாக்களின் கருத்தான “வாழ்த்துக்கள் கூறுவது கூடாது” என்ற கருத்தே இஸ்லாமிய பார்வையில் பொறுத்தமானது என நாம் கருதுகிறோம்.
நன்றி.
 
ஆக்கம்: இர்ஷாத் இனாஸ்

new year islamic

Check Also

02: பிஃக்ஹின் திறவுகோல்

தப்ஃஸீர் ஸுரதுத் தாரிக் (86) 1-8 வரை உள்ள வசனங்கள் பிஃக்ஹின் திறவுகோல்கள் – 2 வழங்குபவர்: அஸ்ஹர் யூஸுஃப் …

Leave a Reply