Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-19)

19வது படிப்பினை
காரியங்களில், செயற்பாடுகளில் நடுநிலமை
ஹுத்ஹுதின் மறைவு சிறிது காலமேயாகும். அது ஸபஇற்கு சென்றுவர சிறிது காலமே எடுத்தது. فمكث“ஃபமகஸ” என்ற வார்த்தையின் ஃபா என்ற எழுத்து ஹுத்ஹுத் தனது மறைவிற்கு காரணம் கூறி தன்னை நிரபராதியாக்கும் நோக்கில் சுலைமான் (அலை) அவர்களிடம் விரைவாக ஆஜராகியதைச் சுட்டிக் காட்டுகிறது.
லுக்மான் (அலை) அவர்கள் தனது மகனுக்கு உபதேசம் செய்யும் போது (நீ உனது நடையில் நடுநிலமையைக் கையாள்வாயாக!) என்றார்கள். (லுக்மான்:19)
எனவே ஒரு முஸ்லிம் தனது நேரத்தை தனது மார்க்கத்திற்கும், மறுமைக்கும் பயன்படும் விடயங்களில் கழிக்க வேண்டும். பயன்கொடுக்காதவைகளில் வீணாக்கிவிடக் கூடாது.
இப்ராஹீம் (அலை) அவர்களது ஸூஹுபுகளில் காணப்பட்டதாவது: ஒரு புத்திசாலி மூன்று விடயங்களுக்காகவே தவிர பிரயாணம் செய்யமாட்டான்.
 1) மறுமையின் கட்டுச் சாதத்திற்காக
 2) வாழ்க்கைத் தேவைக்காக
3) தடைசெய்யப்படாத சுற்றுப் பிரயாணம் (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களை ஏதாவது தேவையின் நிமித்தம் அனுப்பி வைத்தால் அதனை அவர்கள் இயன்றளவு குறுகிய நேரத்திற்குள் முடித்து விட்டு நபியவர்களது சமூகத்திற்கு விரைவாக திரும்புவார்கள்.

Check Also

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? | ஜும்ஆ தமிழாக்கம் |

அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 01 …

Leave a Reply