Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 17

أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾ 
(அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்).  அல்முல்க் – 17  

காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:

(நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவது பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காணமாட்டீர்கள்) பனூ இஸ்ராயீல் – 68.

மேலும் மனிதன் நிம்மதியின்றி பயத்துடன் வாழ வேண்டும் என்பதுபோல் அவ்வசனம் பேசுவதை நாம் கவனிக்கலாம்.
அதன் விளக்கம் யாதெனில்:
அல்லாஹ் இவ்விடத்தில் மறுத்துக் கூறும் பாதுகாப்பு என்னவென்றால்,அவனுக்கு வழிப்படாமலும், அவனது தண்டனைகளை மறந்தும் பாவகாரியங்களில் ஈடுபடுவோர் மீது உலகிலேயே அல்லாஹ்வின் தண்டனைகள் வருவது பற்றி எச்சரிக்கை செய்வதாகும்.

மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்;:
(தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்,அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்) அந் நஹ்ல் – 45.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply