Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 30

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 30

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ﴿٣٠
(‘உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறிவரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” எனக் கேட்பீராக!). அல்முல்க் – 30
இவ்வசனத்தில் அல்லாஹ் தனது படைப்பினங்கள் மீது அருள் சொரிவதைப் பற்றிக் கூறுகிறான்.
(உங்கள் தண்ணீர் வற்றி விட்டால்)
பூமிக்கு மேல் இருக்கும் நீரை பூமிக்குக் கீழ் தோண்டி எடுக்கமுடியாத அளவுக்கு அவன் இழுத்து விட்டாலும்.
(ஊறி வரும் நீரை உங்களுக்குக்கொண்டு வருபவன் யார்)
பூமிக்கு மேல் ஊற்றெடுத்து ஓடும் நீரை உங்களுக்குத் தடுப்பதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் ஆற்றல் பெறமாட்டார்கள். அவனது அருளின் பொருட்டால் தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்து பூமியின் பல பாகங்களிலும் மக்களுக்குத் தேவையான அளவுக்கு ஓட விட்டிருக்கிறான். அவனுக்கே புகழனைத்தும் சொந்தமாகும்.
மாதிரிப் பயிற்சி
1.            நீர் மூலம் அல்லாஹ் அடியார்களுக்கு அருளிய அருட்கொடைகளை ஞாபகமூட்டவே அவ்வசனத்தைக் கூறியுள்ளான். அது போன்று அல்குர்ஆனிலிருந்து இன்னுமொரு வசனத்தைக் கூறுக?
(நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றி சிந்தித்தீர்களா? மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்தமாட்டீர்களா?)அல் வாகிஆ– 68, 70.
2.            பின்வரும் கூற்றுகளுக்கு முல்க் அத்தியாயத்திலிருந்து ஆதாரம் கூறுக?
(a) அறியாமைக்கு மன்னிப்புண்டு.
ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? என்று அதன் காவலர்கள் அவர்களிடம்; கேட்பார்கள்). அல்முல்க் – 8
(b)ஒரு காரியம் நிறைவேற முயற்ச்சியுடன் அதற்கான  காரணங்களைச் செய்ய வேண்டும்.
அவனே பூமியைப் (பயன்படுதத) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15
(c) அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்.
(வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்). அல்முல்க்-16
(அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்). அல்முல்க் – 17
3.            ‘தபாரகல்லதீ” அத்தியாயத்தின் சிறப்புப் பற்றி ஒரு ஹதீஸைக் கூறுக?
புனித அல் குர்ஆனில் ஓர் அத்தியாயம் இருக்கிறது அது முப்பது வசனங்களைக் கொண்டதாகும். அதை ஓதுபவருக்கு அவரது பாவம் மன்னிக்கப்படும் வரை அது அல்லாஹ்விடம் பரிந்துரை செய்யும். அது தான் ‘;தபாரகல்லதீ பியதிஹில் முல்க்” என்று ஆரம்பமாகும் அத்தியாயமாகும் என நபி (ஸல் )  அவர்கள் கூறினார்கள்.   
                                            
                            அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரழி).
                            நூல்அபூதாவூத்,  திர்மிதி, நஸாஈ,

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply