Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 34,35.

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّاتِ النَّعِيمِ ﴿٣٤﴾ 
(நிச்சயமாக (இறைவனை) அஞ்சியோருக்கு அவர்களின்
இறைவனிடம் இன்பமான சொர்க்கச் சோலைகள் உண்டு.) அல் கலம் –
 34
இவ்வுலக தோட்டவாசிகள் அல்லாஹ்வுக்கு மாறு செய்ததன் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட
கைசேதத்தைக் கூறியபின்
அல்லாஹ்விற்கு வழிபட்டு அவனது கட்டளைகளை எடுத்து
நடந்தவர்களுக்கு மறுவுலகில் நிரந்தரமான சுவர்க்கம் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ ﴿٣٥﴾ 
(முஸ்லிம்களை குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?  (அல் கலம் – 35
குறைஷித் தலைவர்கள் நாம் தாம் உலகில் அதிகமான சுகபோகங்களை அனுபவிக்கிறோம்.
முஸ்லிம்கள் தம்மைவிட குறைவான இன்பங்களையே அனுபவிக்கிறார்கள் எனக் கருதிக்
கொண்டிருந்தார்கள்.
மறுமையில் அல்லாஹ் விசுவாசிகளுக்கு வாக்களித்ததை செவியுறும் போது அவர்கள்
கூறுவார்கள்
; முஹம்மதும் அவரின் கூட்டத்தாரும் எண்ணுவது போல் நாமும் அவர்களுடன்
எழுப்பப்பட்டால் இவ்வுலகில் நாம் அவர்களை விட சிறப்பாக இருப்பது போன்று தான் அங்குமிருப்போம் அல்லது குறைந்த பட்சம் இரு தரப்பினரும் சம நிலையில் இருப்போம் எனகூறினர்.
நன்மை செய்தவனும் தீமை செய்தவனும் சமமாக முடியாது என்பதற்கு அல்குர்ஆனில் பல வசனங்கள் உள்ளன.
(நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை பூமியில் குழப்பம் செய்வோரைப் போல் ஆக்குவோமா?
அல்லது (நம்மை) அஞ்சுவோரை குற்றம் புரிந்தோரைப் போல் ஆக்குவோமா?) ஸாத் 28
(குருடரும்பார்வையுள்ளவரும் சமமாகமாட்டார்கள்.
நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தவரும்
, தீமை செய்தவரும் (சமமாகமாட்டார்கள்) குறைவாகவே
நீங்கள் படிப்பினை பெறுகின்றீர்கள்.) அல் முஃமின் –
 58.
(நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல்
ஆவாரா
அவர்கள் சமமாக மாட்டார்கள்)  அஸ்ஸஜதா 
18.

 

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply