Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / கேள்வி/பதில் – நகம் வெட்டுதலில் ஏதேனும் முறைகள் உள்ளதா? பதிலளிப்பவர்: மௌலவி: முஜாஹித் இப்னு ரஸீன்

கேள்வி/பதில் – நகம் வெட்டுதலில் ஏதேனும் முறைகள் உள்ளதா? பதிலளிப்பவர்: மௌலவி: முஜாஹித் இப்னு ரஸீன்

 நகம் வெட்டுதலில் ஏதேனும் முறைகள் உள்ளதா? அதாவது முதலில் வலது கையின் ஆட்காட்டி விரலில் இருந்து ஆரம்பித்து பெருவிரலில் முடிப்பது, அடுத்து இடது கையில் சில முறைகள், அடுத்து  வலது கால்,இடது கால் இவ்வாறான முறைகள் மார்க்கத்தில் உள்ளதா?

பதிலளிப்பவர்: மௌலவி: முஜாஹித் இப்னு ரஸீன்.

இவ்வாறான முறைகள் எதுவும்மில்லை, இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி, இமாம் இராகி, இமாம் இப்னு தகீக் அல்யீத் போன்ற அறிஞர்கள் இவ்வாறான முறைகள் அஸ்ல் அற்ற, அடிப்படை அற்ற முறைகள் என்று விமர்சித்துள்ளார்கள், அதே போன்று வீட்டில் வைத்து நகம் வெட்டினால் தறித்திரியம், ஆகாது என்றும் வெட்டிய நகத்தை கலிமா சொல்லி புதைக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லுவார்கள் இதுவும் அடிப்படை அற்ற முறையாகும்.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக சுத்தம் செய்யும் முறைகளை வலது புறத்தில் இருந்து ஆரம்பிப்பார்கள் என்பதனால் வலது கையின் நகங்களை முதலாவது வெட்டுவதும் இடது கையின் நகங்களை இரண்டாவது வெட்டுவதும் நபிவழியே.

Check Also

பெரும் பாவங்களும் படித் தரங்களும் – இமாம் இப்னு ஹஸ்மின் நூலிலிருந்து

அஷ்ஷைக் முஜாஹித் இப்னு ரஸீன் பெரும் பாவங்களும் படித் தரங்களும் நூல்: நரக விடுதலைக்கான வழிகள் ஆசிரியர் : இமாம் …

Leave a Reply