Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 5 to 7

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் கலம்– வசனம் 5 to 7

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ﴿٥﴾ بِأَييِّكُمُ الْمَفْتُونُ ﴿٦﴾
إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ﴿٧﴾  
(உங்களில் யாருக்குப் பைத்தியம் என்று நீரும்; பார்ப்பீர்! அவர்களும் பார்ப்பார்கள். நிச்சயமாக உமது இறைவன் தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை நன்கு அறிந்தவன். நேர்வழி; பெற்றோரையும் அவன் நன்கு அறிந்தவன்). அல் கலம் – 5-7
யாருக்குப் பைத்தியம் என்பதை மறுமை நாளில் நீர் உட்பட உம்மைப் பொய்ப்பிக்கக்கூடிய வழி தவறியவர்களும் அறிவார்கள். இக்கருத்தை வழியுறுத்தக் கூடிய இன்னும் சில வசனங்களை நாம் பார்க்கலாம்.
அல்லாஹ் கூறுகிறான்:
(யார் கர்வம் கொண்ட பெரும் பொய்யர் என்பதை நாளை அறிவார்கள்)
அல் கமர் – 26.
மேலும் மற்றுமொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(நாமோ அல்லது நீங்களோ நேர் வழியிலோ பகிரங்கமான வழி கேட்டிலோ இருக்கிறோம்). ஸபா – 24.
நிச்சயமாக அல்லாஹ் மாத்திரம் தான் இவ்வாறு பிரிவினர்கள் யார் நேர்வழி பெற்றவர், யார் சத்தியத்தை விட்டு வழி தவறியவர் என்பதை நன்கறிவான்.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply