Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

படிப்பினை-24 – எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து..

24வது படிப்பினை
தகவல்களை வழங்க முன் அவைகளை ஊர்ஜிதப்படுத்தல்
وَجِئْتُكَ مِنْ سَبَإٍ بِنَبَإٍ يَقِينٍ } [النمل: 22]
உறுதியான தகவலைக் கொண்டு வந்துள்ளேன்
அதிகாரியிடம் கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு தகவலும் சரியென உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
தகவலைக் கொண்டு சென்றவன் பொய்ப்பிக்கப்பட்டு, சந்தேகத்திற்கு ஆளாகாமலிருக்க, அதனை முன்வைக்க முன் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இதனாலேயே ஹுத்ஹுத் பல்கீஸ் ராணியைப் பற்றித் தான் கொண்டு வந்த தகவல் உறுதியாகவே உண்மைதான் என உறுதிப்படுத்தியது. ஏனெனில் தகவல்களை உறுதிப்படுத்தாது கூறுவதன் மூலம் சிலவேளை சமூகத்தில் வீணான பெரும் சிரமங்களை ஏற்படுத்திவிடும் அல்லது அதிகாரியை அபாயத்திற்கோ அல்லது மற்றோருக்கு அநியாயம் இழைப்பதற்கோ இட்டுச் செல்லலாம்.
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ரஸுல் (ஸல்) அவர்கள் பனுல் முஸ்தலக் கூட்டத்தின் ஸகாதை எடுத்து வருமாறு ஒரு மனிதரை அனுப்பினார்கள். அவர்களும் அவரை வரவேற்க வெளியேறினார்கள். ஷைதான் அவரது உள்ளத்தில் அவர்கள் இவரைக் கொல்வதற்கு வருகிறார்கள் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிடவே அவர்நபியவர்களிடம் திரும்பி வந்து அவர்கள் ஸகாத் வழங்க மறுத்து விட்டனர்எனக் கூறினார். உடனே நபியவர்கள் கோபமுற்றார்கள். வந்தவர்திரும்பிச் சென்ற விடயம் தெரியவந்த அம்மக்கள் நபியவர்களிடம் வந்து, அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் அதிருப்தியிலிருந்து அல்லாஹ்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறோம். ஸகாத் வசூலிக்க ஒருவரை அனுப்பி வைத்தீர்கள். அதனால் நாம் சந்தோசமடைந்து, கண்குளிர்ந்தோம். ஆனால் அவரோ வந்த வழியே இடையில் திரும்பி விட்டதும் அது அல்லாஹ்வினதும், அவனது தூதரினதும் கோபத்தினால் ஏற்பட்டதோ எனப் பயந்து விட்டோம் எனத் தெரிவித்தனர்.
உடனே அல்லாஹ் பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தை இறக்கிவைத்தான். (( விசுவாசிகளே! நீங்கள் தெரியாது ஒரு கூட்டத்தைப் பிடித்துவிட்டு நீங்கள் செய்ததற்கு கவலைப்படாதிருப்பதற்காக, ஒரு பாவி உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள.;;.))  (அல்ஹுஜ்ராத்: 06)
மேலும் தகவல்களில் மிக உண்மையானது நேரடியாகக் கண்டதும், உறுதியாக அறிவதை விட உறுதியாகக் காண்பதே தரம் கூடியதுமாகுமென்பதும் தெளிவாகிறது. மேலும் தகவல்களிலும், செய்திகளிலும் மிக முக்கியமானது மக்களது மதம், கொள்கை சம்பந்தமானதாகும்.
 தொடரும்……

Check Also

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் | ஜும்ஆ தமிழாக்கம் |

வதந்திகளைக் கையாள்வதற்கான இஸ்லாத்தின் வழிகாட்டல்கள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 22 …

Leave a Reply