Home / Q&A / Q & A மார்க்கம் பற்றியவை / பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று சொல்லும் போது வலது புறமும், இடது புறமும் தலையை திருப்ப வேண்டுமா?

பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று சொல்லும் போது வலது புறமும், இடது புறமும் தலையை திருப்ப வேண்டுமா?

பதிலளிப்பவர் மௌலவி அப்பாஸ் அலி MISC…

பாங்கில் ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ என்று சொல்லும் போது முறையே வலது புறமும், இடது புறமும் தலையை திருப்ப வேண்டுமா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜின் போது) மக்காவி(லிருந்து மினா செல்லும் சாலையி)லுள்ள அப்தஹ் எனுமிடத்தில் தோலால் ஆன சிவப்பு நிறக் கூடாரமொன்றில் இருக்க, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது நபியவர்கள் உளூச் செய்தார்கள்…. பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே வந்தார்கள்… அப்போது பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். அவர்கள், ஹய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல் ஃபலாஹ்’ என்று கூறும் போது இங்கும் அங்குமாக, அதாவது வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் திரும்பிய போது நான் அவர்களது வாயையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறிவிப்பவர்: அபூஜுஹைஃபா (ரலி)
நூல்: முஸ்லிம் 777
பிலால் (ரலி) அவர்கள் பாங்கு சொல்லும் போது ஹைய்ய அலஸ் ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ்’ எனக் கூறும்நேரத்தில் தன் தலையை வலப்புறமும்​ இடப்புறமும் திருப்பினார்கள். இந்நிகழ்வு நபி(ஸல்) அவர்களின் முன்னலையில் நடந்துள்ளது. எனவே இச்செயலுக்கு நபி(ஸல்) அவர்களின் அங்கீகாரம் உள்ளதால் இது விரும்பத்தகுந்த செயலாகும். ஆனால் இவ்வாறு செய்வது கட்டாயம் எனக் கூறக் கூடாது.
ஏனென்றால் பாங்கு சொல்பவர் தலையை திருப்ப வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை.  நபி(ஸல்) அவர்களின் கட்ளைகள் கட்டாயம் என்பதை உணர்த்தும். இச்செயலுக்கு நபி(ஸல்) அவர்களின் கட்டளை இல்லை என்பதால் இது கடமையானக் காரியமல்ல. மாறாக இது விரும்பத்தகுந்த செயலாகும்.

பாங்கின் சப்தம் வலப்புறமும் இடப்புறமும் கேட்பதற்காக பிலால்(ரலி) அவர்கள் திரும்பியிருக்கலாம். இன்று நாம் மைக்கில் பாங்கு சொல்வதால் இவ்வாறு திரும்ப அவசியமில்லை.

 

Check Also

திருமணத்திற்கு முன் பெண்ணை பார்க்கலாமா? | கேள்வி பதில் |

திருமணத்திற்கு முன் பெண்ணை பார்க்கலாமா? அஷ்ஷேக் ரம்ஸான் பாரிஸ் (மதனி) சிறப்பு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி திருமணத்திற்கு முன் …

Leave a Reply