Home / Tafseer / குர்ஆன் தப்ஸீர் அரபி இலக்கணத்துடன் / பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள் வசனங்கள் 6

பாடம் 1 அத்தியாயம் 114 அந்நாஸ்-மனிதர்கள்  வசனங்கள் 6

 

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குல் அஊது பிரப்பிந்நாஸ் என்பதிலுள்ள நாஸ் எனும் வார்த் தையே இதற்கு பெயராக்கப்பட்டுள்ளது.

                          بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ    
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾ مَلِكِ النَّاسِ ﴿٢﴾ إِلَـٰهِ النَّاسِ ﴿٣﴾
مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ﴿٥﴾ 
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾
 
رَبّ
بِ
اَعُـوْذُ
قُـلْ
படைத்துப்பாதுகாப்பவன்
கொண்டு
நான்பாதுகாப்புத்தேடுகிறேன்
நீசொல்

اَلنَّـاسِ
اِلـهِ
اَلنَّـاسِ
مَـلِـكِ
اَلنَّـاسِ
மக்கள்
வணங்கப்படுவன்
மக்கள்
அதிபதி
மக்கள்
 
الْـخَـنَّـاسِ
وَسْـوِاسِ
شَـرّ
مِنْ
பதுங்கியிருப்பவன்
ஊசலாட்டம்
தீங்கு
விட்டும் / இருந்து
 
اَلنَّـاسِ
صُدُوْر
فِي
يُـوَسْـوِسُ
اَلَّـذِي
மக்கள்
உள்ளங்கள்
இல்
ஊசலாட்டம்செய்வான்
எப்படிப்பட்டவன்
 
اَلنَّـاسِ
وَ
اَلْـجِـنَّـة
مِنَ
மக்கள்
மேலும்
ஜின்கள்
விட்டும் / இருந்து
 
صُدُوْر(பன்மை)صَدْرٌ(ஒருமை) ,  جِـنَّـةٌ(பன்மை)  جِـنٌّ(ஒருமை).

  

  1. (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
  2. (அவனே) மனிதர்களின் அரசன்;
  3. (அவனே) மனிதர்களின் நாயன்.
  4. பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
  5. அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
  6. (இத்தகையோர்) ஜின்களிலும்மனிதர்களிலும் இருக்கின்றனர்.

 

பதுங்கியிருந்து கொண்டு மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை விளைவிக்கும் ஷைத்தானின் தீங்கை விட்டும் மனிதர்களைப் பாதுகாப்பவனும், மனிதர்களின் அதிபதியும், மனிதர்களால் வணங்கப்படுபவனு மான (அல்லாஹ்விடம்) நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (நபியே) நீர் கூறும்.  (அந்த ஷைத்தான்)  மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கிறான்.

 

مَاضٍ சென்றகாலம்
مُضَارِعٌ  வரும், நிகழ் காலம்
اَمْـرٌ ஏவல்
نَهْيٌ விலக்கல்
قَـالَஅவன்கூறினான்
يَقُوْلُ கூறுவான்/ கூறுகிறான்
قُلْ நீகூறு
لا تُقُلْ நீகூறாதே
عَـاذَ 
பாதுகாப்புத் தேடினான்
يَـعُـوْذُ பாதுகாப்புத் தேடுவான்
عُـذْ
பாதுகாப்புத்    தேடு
لا تـعُـذْ
பாதுகாப்புத்தேடாதே
وَسْـوَسَ
ஊசலாட்டம் செய்தான் 
يُـوَسْـوِسُ
ஊசலாட்டம்செய்வான் /  செய்கிறான்
وَسْـوِسْ
ஊசலாட்டம்செய்
لَا تُـوَسْـوِسْ
ஊசலாட்டம்செய்யாதே

அரபியில் வார்த்தைகள் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல் என மூன்று மட்டுமே. இப்பகுதியில் மூன்றையும் குறிப்பிடுவோம்

.ஒருமுறை கூறிய வார்த்தைகளை மீண்டும் கூறமாட்டோம்

 

வினைச் சொற்களை கட்டங்களினுள் குறிப்பிட்டுள்ளோம். பெயர்ச் சொற்களையும் இடைச் சொற்களை யும் 1 மற்றும் 2 என்ற எண்களின் கீழ் குறிப்பிடுவோம். அரபியில் வினைச் சொற்களை அறிஞர்கள்  கட்டங் களிலுள்ளவை போல 4 பங்குகளாக்கியுள்ளனர்

 

1رَبٌّ,اَلنَّـاسِ,مَـلِـكِ,اِلـهِ, شَـرِّ, وَسْـوِاسِ, اِلْـخَـنَّـاسِ, اَلَّـذِي, صُدُوْر, اَلْـجِـنَّـةِ

بِ – கொண்டு, مِـنْ – விட்டும் / இருந்து فِـي – ல் . இம்மூன்றும், இன்னும் இதுபோன்ற சில இடைச் சொற் களும் உண்டு (இன்ஷா அல்லாஹ் அவற்றை அந்தந்த இடங்களில் குறிப்பிடுவோம்). இந்த இடைச் சொற்கள் இவற்றை அடுத்து வரும் பெயர்ச்சொல்லுக்கு கசர்(ஜேர்) செய்யும். இதற்கு இலக்கணத்தில் جَـرُّ என்றும் இந்த எழுத்துக்களுக்கு جَـرُّ உடைய எழுத்து என்றும் கூறப்படும். உதாரணமாக مِنْ شَرِّ என்பதில் مِنْ – க்கு حَـرْفٌ جَـارٌّ (ஜர்ரு செய்யும் எழுத்து) என்றும் شَرِّ- க்கு مَـجْـرُوْرٌ (ஜர்ரு செய்யப்பட்ட இஸ்ம்) என்றும் கூற வேண்டும்.

கவனிக்க: فِـعْـلٌ – வினைச்சொல்,  مَـاض – கடந்தகாலம்,  مُـضَـارِعٌ – வரும் / நிகழ் காலம்,  مُـسْتَـقْـبِـلٌ – வரும் காலம்,  حَـالٌ – நிகழ்காலம்,   اَمْـرٌ – ஏவல், نَـهْـيٌ – விலக்கல்.

குறிப்பு:

رَبٌّ شَـرِّ  وَسْـوِاس ஆகிய இந்த மூன்றுக்கும் مَـصْـدَرٌ (மூலச் சொல்) என்று கூறப்படும். அதாவது செய்தல், உண்ணுதல், குடித்தல், போன்ற பொருள்களுக்கு பயன்படுத்தப்படும். இது குர்ஆன், ஹதீஸ்களில் அதிகமாக வருகிறது.

இந்த அத்தியாயத்தில் மக்களின் இரட்சகன், மக்களின் அரசன், மக்களால் வணங்கப்படும் இறைவன் என அல்லாஹ் தனது பண்புகளில் மூன்றைக் கூறி அவனிடம் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும்படி கட்டளையிட்டுள்ளான். ஷைத்தான் மனிதனுக்கு மிகப் பகிரங்கமான பகைவன் என பல திரு வசனங்கள் மூலம் எச்சரித்துள்ளான்.

மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூயவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அந்த ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். திட்டமாக அவன் தீயதையும் அறுவறுப்பானவைகளையும் செய்யும் படியும், நீங்கள் அறி யாத வற்றை அல்லாஹ்வின் மீது சொல்வதையும் உங்களிடம் ஏவுகிறான்  (அல்குர்ஆன் : 2:168,169)  இன்னும் 2:208, 6:142, 7:22, 12:5, 36:30, 43,62, 20:117  & 28:15 போன்ற வசனங்களையும் பார்க்கவும்.

 

رَبَّபடைத்துப் பாதுகாத்தான்
يَـرُبُّபடைத்துப் பாதுகாப்பான்
رَبٌّபடைத்துப் பாதுகாத்தல்
شَـرَّதீங்கிழைத்தான்
يَـشَـرُّதீங்கிழைப்பான்
شَـرٌّதீங்கிழைத்தல்
وَسْـوَسَ 
ஊசலாட்டடம் செய்தான்
يُـوَسْـوِسُஊசலாட்டம்செய்வான் செய்கிறான்
وَسْـوِاسஊசலாட்டம்செய்தல்

இந்த அத்தியாயத்தில் மக்களின் இரட்சகன், மக்களின் அரசன், மக்களால் வணங்கப்படும் இறைவன் என அல்லாஹ் தனது பண்புகளில் மூன்றைக் கூறி அவனிடம் ஷைத்தானின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும்படி கட்டளையிட்டுள்ளான். ஷைத்தான் மனிதனுக்கு மிகப் பகிரங்கமான பகைவன் என பல திரு வசனங்கள் மூலம் எச்சரித்துள்ளான்.

 மனிதர்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூயவற்றை உண்ணுங்கள். ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அந்த ஷைத்தான் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். திட்டமாக அவன் தீயதையும் அறுவறுப்பானவைகளையும் செய்யும் படியும், நீங்கள் அறி யாத வற்றை அல்லாஹ்வின் மீது சொல்வதையும் உங்களிடம் ஏவுகிறான்  (அல்குர்ஆன் : 2:168,169)  இன்னும் 2:208, 6:142, 7:22, 12:5, 36:30, 43,62, 20:117  & 28:15 போன்ற வசனங்களையும் பார்க்கவும்.

இந்த அத்தியாயம் குறித்து ஹதீஸ்களில் வந்துள்ளவற்றில் சில:

நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது தமது இரு முன் கைகளைச் சேர்த்துக் குவித்து வைத் துக் கொண்டு குல்ஹுவல்லாஹு அஹத், ஃபலக், நாஸ் ஆகிய மூன்று அத்தியாயங்களையும் ஓதி ஊதி முடிந்த அளவு தமது உடல் முழுவதும் தடவிக் கொள்வார்கள். அப்போது தலை, முகம், உடலின் முன் பாகத்தை அவ்விரு கைகளால் தடவுவதை ஆரம்பித்துக் கொள்வார்கள்.: ஆயிஷா(ரலி) ,புகாரி.

இன்றைய தினம் இறக்கப்பட்டிருக்கிற குல் அவூது பிரப்பில் ஃபலக், குல்அவூது பிரப்பின் நாஸ் போன்ற திரு வசனங்கள் (இதற்கு முன்னர்) இறக்கப்படவில்லை என்பதை நீர் அறியவில்லையா? என உக்பா பின் ஆமிரிடம் ரசூல் (ஸல்) கூறியதாகக் கூறினார்கள்.  [ முஸ்லிம்.]

நான் அல்லாஹ்வின் தூதரைச் சந்தித்தேன், அப்போது அவர்கள் உக்பாவே! உன்னுடனுள்ள உறவு முறை யைத் துண்டிப்பவனை நீ அறவணைத்துக்கொள். உனக்குத் தர மறுப்பவருக்கு நீ கொடுத்துக்கொள். உனக்கு அநீதி இழைப்பவனை நீ மன்னித்துவிடு என்று கூறினார்கள். பின்னர் நான் ரசூல்(ஸல்) அவர்களி டம் வந்தேன், அப்போது அவர்கள் உக்பாவே! உனது நாவை அடக்கி வைத்துக் கொள். தவறுக்காக அழு.  உனது வீட்டை விசாலப்படுத்திக்கொள் என்றார்கள். பின்னர் ரசூல்(ஸல்) அவர்களைச் சந்தித்தேன். அப் போது அவர்கள் உக்பாவே! உனக்கு சில அத்தியாயங்களைக் கற்றுத்தரட்டுமா? அவை போன்றவை தவ் ராத், இன்ஜீல், ஸபூர், ஃபுர்கான் ஆகிய வேதங்களில் இறக்கப்பட்ட வில்லை! எந்த இரவும் அவற்றை நீ ஓதாமல் சென்று விடக்கூடாது, (அவை) குல்ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின் நாஸ் எனக் கூறினார்கள். நான் இவற்றை ஓதாதமல் எந்த இரவும் கடந்து செல்ல வில்லை. அவற்றை ஓத அல்லாஹ்வின் தூதர் எனக்குக் கட்டளையிட்டிருக்க அவைகளை விட்டு விடு வது எனக்கு தகுமானதல்ல என்று கூறினார்கள்.  [அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), : அஹ்மத்]

Check Also

குர்ஆனின் வரலாறு

குர்ஆனை ஆய்வு செய்த அறிஞர்கள் குர்ஆனிலுள்ள மொத்த எழுத்துக்கள், வார்த்தைகள் பற்றியும் ஆய்வு செய்து அறிவித்துள்ளார்கள், அவ்வாறு செய்தவர்களில் குர்ஆனிலுள்ள …

One comment

  1. M.Y.M.Hameed Jawahar Ali Maraicar

    Assalamualaikum naan entha moondru aayaththugal + Aayaththukurush oodhuvathaiyum valakkamaakavaiththu erukireen. Inshallah elmudan eruthivarai erkka naamakku Allah outhavisaivaanouthavisaivaanM

Leave a Reply