Home / Islamic Months / Haj / Umrah / Sacrifice / ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 4

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் – 4

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

ஸயீயோடு தொடர்புடைய தவறுகள்:

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ سورة البقرة : 158

1. இந்த வசனத்தை சிலர் அனைத்து சுற்றுக்களிலும் ஓதுகின்றனர். முதல் சுற்றில் ஸயீயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. மர்வாவில் ஓத வேண்டிய தேவையில்லை.

2. தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பிறகும் ஸயீயை தொடர்வது இது தவறாகும் . ஸயீ செய்து கொண்டிருக்கும்போது கடமையான தொழுகையை அடைந்து விட்டால் ஸயீயை துண்டித்து விட்டு தொழுகையை நிறைவேற்றவேண்டும். பிறகு விடுபட்ட இடத்திலிருந்து ஸயீயை பரிபூரணமாக செய்து முடிக்க வேண்டும்.

3. ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஸயீ செய்யும் போது கட்டாயம் ஒளூ இருக்க வேண்டும் என்று சிலர் கருதுகின்றனர் இது தவறாகும். ஒளூ இல்லாமலும் ஸயீ செய்யலாம்.

4. தவாஃப் செய்து முடித்தவுடன் இடைவெளியில்லாமல் நேரடியாக ஸயீ செய்ய வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். களைப்பாக இருப்பின் தவாஃபுக்கும் ஸயீயுக்கும் மத்தியில் அல்லது ஒவ்வொரு தவாஃபுக்கு மத்தியிலும் ஒவ்வொரு ஸயீக்கு மத்தியிலும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை 2:286

5. பச்சை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதியை தவிர ஸஃபா மர்வாவில் வேகமாக ஓடுவது இதுவும் தவறாகும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அனுமதி பெண்களுக்கு அனுமதியில்லை.

6. ஸஃபா மர்வாவில் பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதம் கூட்டாக சப்தமாக து ஆ செய்வது இதுவும் மிகப்பெரும் தவறாகவும் . துஆவின் ஒழுங்குமுறைகளில் உள்ளது தான் உள்ளச்சத்தோடு , பணிவாக , கூச்சலிடாமல் நெருக்கடி ஏற்படுத்தாமல் து ஆ செய்வது.

7. ஸஃபாவிலும் மர்வாவிலும் இரண்டு ஸயீ செய்துவிட்டு அதனை ஒரு ஸயீ என கருதுவது இது அறியாமையினால் ஏற்படும் தவறாகும். இவ்வாறு செய்யும் போது 14 ஸயீ ஆகிவிடும். ஸஃபாவிலிருந்து மர்வா வரை ஒரு ஸயீ முடிவடைகிறது. மீண்டும் மர்வாவிலிருந்து ஸஃபாவரை இரண்டாவது ஸயீ முடிவடைகிறது இவ்வாறு 7 வது ஸயீ மர்வாவில் முடிவடையும்.

8. ஸயீயில் இழ்திபாவின் நிலை : ஸயீ செய்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது. இதுவும் தவறாகும். இந்நிலை தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃபிற்கு மட்டுமே. ஆனால் ஹாஜிகளில் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர் இதுவும் தவறாகும்.

9. ஸஃபா மற்றும் மர்வாவில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டுள்ள அந்த சிறு பாறைகளின் மீது ஏறினால் தான் ஸயீ பரிபூரணமாகும் என சிலர் கருதுகின்றனர் இதுவும் தவறாகும். சற்று மேடான பகுதிகளில் சென்று வந்தாலே போதுமானது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும்

அஷ்ஷேக் தஸ்னீம் கபுரி ஹஜ் வழிகாட்டுதல் வகுப்பு துல்ஹஜ் பத்து நாற்களும் அதில் செய்ய வேண்டிய சில அமல்களும் 17 …

Leave a Reply