Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)

102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்)

அத்தியாயம் 102 அத்தகாஃதுர் (அதிகமாகத் தேடுதல்) –  வசனங்கள்8
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾
(1)செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கிவிட்டது
التَّكَاثُرُ
كُمُ
أَلْهَا
அதிகமாகத் தேடுவது
உங்களை
பராக்காக்கிவிட்டது/பாராமுகமாக்கிவிட்டது
 حَتَّىٰ زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾
(2) நீங்கள்கப்றுகளைச் சந்திக்கும் வரை.
الْمَقَابِرَ
زُرْتُمُ
حَتَّىٰ
மண்ணறைகள்
சந்தித்தீர்கள்
வரை
 كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾
(3) அவ்வாறில்லைவிரைவில் நீங்கள்அறிந்துகொள்வீர்கள்.
سَوْفَ تَعْلَمُونَ
كَلَّا
நீங்கள் அறிவீர்கள்
அவ்வாறல்ல
 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾
(4)பின்னர் அவ்வாறல்லவிரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். 
سَوْفَ تَعْلَمُونَ
ثُمَّ كَلَّا
நீங்கள் அறிவீர்கள்
பின்னர் அவ்வாறல்ல
 كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ﴿٥﴾
(5)அவ்வாறல்ல -மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
الْيَقِينِ
عِلْمَ
لَوْ تَعْلَمُونَ
كَلَّا
உறுதி
அறிவு
அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால்
அவ்வாறல்ல
 لَتَرَوُنَّ الْجَحِيمَ ﴿٦﴾
(6)நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப்பார்ப்பீர்கள்.
الْجَحِيمَ
لَتَرَوُنَّ
நரகம்
நிச்சயம்‌ பார்ப்பீர்கள்
 ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ﴿٧﴾
(7) பின்னும்நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால்பார்ப்பீர்கள்.
الْيَقِينِ
عَيْنَ
هَا
لَتَرَوُنَّ
ثُمَّ
உறுதி
கண்
அதை
நீங்கள் பார்ப்பீர்கள்
பின்னும்,
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ﴿٨﴾
 (8)பின்னர் அந்நாளில் (இம்மையில்உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த)
அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள்கேட்கப்படுவீர்கள்.
النَّعِيمِ
عَنِ
يَوْمَئِذٍ
لَتُسْأَلُنَّ
ثُمَّ
அருட் கொடை
பற்றி
அந்நாள்
நிச்சயமாக நீங்கள்கேட்கப்படுவீர்கள்
பின்னும்

Check Also

குர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு – தஜ்வீத் சட்டங்கள் பாடம் 10 – Quran Thajweed class in Tamil part 10

குர்ஆன் தஜ்வீத் சட்டங்கள், வழங்குபவர் பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் (அதிரை, காதிர் முகைதீன் கல்லூரியின் அரபி பேராசிரியர்)

One comment

  1. Assalamualaikum..குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை முழுமையாக கிதாபாக கிடைக்குமா?

Leave a Reply