Home / Uncategorized / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-14)

14வது படிப்பினை

குற்றமின்றி தண்டனையில்லை.
لَأُعَذِّبَنَّهُ عَذَابًا شَدِيدً  (النمل: 21)
நிச்சயமாக அதற்கு நான் கடுமையான தண்டனை வழங்குவேன்.
சுலைமான் (அலை) அவர்கள் தொழுகைக்காக வுழூ செய்ய நாடிய சமயம்  ஜின்கள் 
தண்ணீரை எடுப்பதற்காக அது இருக்கும் இடத்தை அறிவிக்கும் ஆற்றல் மிக்க 
ஹுத்ஹுதைத் தேடினார்கள், தனது அனுமதியின்றி  அது சமூகமளிக்கத் 
தவறியதையறிந்ததும் அதனைத் தண்டிக்க முற்பட்டார்கள். 
ஏனெனில் அது தனது கடமையை நிறைவேற்றத் தவறியமையினால் 
முழுப் படையினதும் தொழுகையும் தாமதமாகக் காரணமாகிவிட்டது. 
அதனால் அது கடும் தண்டனைக்குள்ளாக நேரிட்டது. 

அவ்வாறே மற்றோரை நரகிலிருந்து பாதுகாத்து சுவர்க்கம் நுழைவிக்கும் பணியான 
அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, அவனது பாதையில் போர் செய்யாது
ஏனைய காரியங்களில் இச்சமுதாயமும் ஈடுபட்டு விடுமேயானால் அதற்கும் அவனது 
தண்டனை இறங்கும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிட புறப்படவில்லையானால் 
உங்களை நோவினை தரும் வேதனை செய்வான். மேலும் வேறு ஒரு 
கூட்டத்தைப் பகரமாகக் கொண்டு  வருவான்.) (அத்தௌபா:39) 
இவ்வாறே குற்றம் செய்ததற்குத் தண்டனையாகவும், ஏனையோர் அவ்வாறு 
செய்வதைத் தடுக்குமுகமாகவும் குற்றவாளியைத் தண்டிப்பதும், 
அவனுக்கு அல்லாஹ் விதித்த தண்டனையை நிறைவேற்றாமலிருக்க
எவருடைய சிபாரிசையும் ஏற்றுக் கொள்ளாமலிருப்பதும் ஆட்சியாளர் அல்லது 
அதிகாரியினது கடமையாகும். 
தனக்கும் இத்தண்டனை கிடைக்குமே என்று பயப்படும் பலவீனமான உள்ளங்களைத் 
தடுப்பதற்காக தண்டனையைப் பகிரங்கப்படுத்தவும் வேண்டும். 
எனவேதான் அல்லாஹ் கூறுகிறான்: ((அவ்விருவருடைய தண்டனையின் போது விசுவாசிகளின் ஒரு கூட்டம் 
சமூகமளிக்கட்டும்.)) ((அந்நூர்:02))
 தொடரும்……

Check Also

முழுமையான வெற்றிக்கான மூன்று காரணிகள் | ஜும்ஆ தமிழாக்கம் | Asshiek Abdullah Uwais Meezani |

முழுமையான வெற்றிக்கான மூன்று காரணிகள் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 04 …

Leave a Reply