الدَّرْسُ السَّادِسُ – ஆறாவது பாடம்
هذِهِ –இவள்
هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ
இவன் ஹாமித் உடைய மகன் மேலும் இவள் யாசிர் உடைய மகள்.
اِبْنُ حَامِدٍ جَالِسٌ وَ بِنْتُ يَاسِرٍ وَاقِفَةٌ
அமர்ந்து இருப்பவன் ஹாமிதுடைய மகன். நின்று கொண்டிருப்பவள் யாசிருடைய மகள்.
இவள் யார்? مَنْ هذِهِ ؟
இவள் பொறியாளருடைய சகோதரி. هذِهِ أُخْتُ المُهَنْدِسِ.
இவளும் பொறியாளரா? أ هِيَ أيْضًا مُهَنْدِسَةٌ ؟
இல்லை, இவள் மருத்துவர். لا , هِيَ طَبِيْبَةٌ
இது யாருடைய வாகனம்? سَيَّارَةُ مَنْ هذِهِ ؟
இது மேலாளர் உடைய வாகனம். هذِهِ سَيَّارَةُ المُدِيْرِ .
இது என்ன? مَا هذِهِ ؟
இது சலவை பெட்டி. هذِهِ مِكْوَاةٌ .
இது யாருக்குரியது? لِمَنْ هذِهِ ؟
இது காலிதிற்கு உரியது. لِخَالِدٍهذِهِ
இது அனஸ் உடைய சைக்கிளா?أ دَرَّاجَةُ أَنَسٍ هذِهِ ؟
لا , هذِهِ دَرَّاجَةُ عَمَّارٍ . هذِهِ جَدِيْدَةٌ . وَ دَرَّاجَةُ أَنَسٍ قَدِيْمَةٌ
இல்லை, இது அம்மாருடைய சைக்கிள். இது புதியது. மேலும் அனஸ் உடைய சைக்கிள் பழையது.
هذِهِ ساعة عليٌ. هىَ جميلةٌ جدًّ.
இது அலி உடைய கைகடிகாரம். இது மிகவும் அழகானது.
هذهِ مِلعَقَةٌ و هذه قدرٌ. المِلعفةُ فى القِدرِ
இது கரண்டி, மேலும் இது பானை. கரண்டி பானையில் (இருக்கிறது).
இது விவசாயி உடைய மாடு. هذه البقرةُ الفلّاحِ
இது மூக்கு மேலும் இது வாய். هذا أنف و هذا فمٌ
இது காது மேலும் இது கண். هذه أذنٌ و هذهِ عينٌ
இது கை மேலும் இது கால். هذه يدٌ و هذهِ رِجلٌ
هذِهِ –இவள்
இந்த பாடத்தில் நாம் பார்க்கப்போவது اِسْمُ الاِشَارةُ لِلْقَرِيْبِ مُؤَنَّث.
அரபியில் அனைத்து விஷயங்களும் ஆண்பாலிலோ அல்லது பெண்பாலிலோ தான் வரும். மனிதர்களை குறித்தாலும், மனிதன் அல்லாதவற்றை குறித்தாலும் சரியே. ஆங்கிலத்தில் He, She என்று ஆணையும் பெண்ணையும் குறிக்க வரும் ஆனால் அது என்பதை குறிக்க it என்று பொதுவாகவே வரும். ஆனால் அரபியில் அது என்பது கூட ஆண்பாலிலோ அல்லது பெண்பாலிலோ தான் வரும்.
هذا – اِسْمُ الاِشَارةُ لِلْقَرِيْبِ مُذَكَّر அருகாமையில் உள்ளவையை (ஆண்பாலை) சுட்டிக்காட்ட உதவும்
اِسْمُ الاِشَارةُ لِلْقَرِيْبِ مُؤَنَّث – هذه அருகாமையில் உள்ளவையை (பெண்பாலை)சுட்டிக்காட்ட உதவும்.
اِعْرَابٌ
هذِهِ ابْنُ حَامِدٍ وَ هذِهِ بِنْتُ يَاسِرٍ
هذِهِ – مبتدأ, ابْنُ – خبرٌ وهو مضاف, حَامِدٍ – مضاف إليه
وَ – حرف عطف
هذِهِ – مبتدأ ,بِنْتُ- خبرٌ وهو مضاف ,يَاسِرٍ – مضاف إليه
لا – حرف الجواب
هِيَ – مبتدأ
طَبِيْبَةٌ – خبر
இங்கு கவனிக்க வேண்டியவிஷயம் என்னவென்றால்طبيبஎன்ற பெயர்ச்சொல்طَبِيْبَةٌ என இங்கு வருகிறது. இதைப்பற்றி இங்கு பார்ப்போம்.
مبتدأவும் خبرம் இரண்டு விஷயங்களில் எப்போதும் ஒத்துபோக வேண்டும்.
- பால் (ஆண்பால், பெண்பால்).
- எண்ணிக்கை (ஒருமை, இருமை, பண்மை(
ஆகவே இங்குمبتدأவாகிய هِيَ பெண்பாலில் இருப்பதால்طَبِيْبَةٌ எனخبرம் பெண்பாலில் இருக்கிறது.
பெண்பால் பெயர்ச்சொற்கள் அநேகமாக ة வைக் கொண்டு முடிவடைவதாக இருக்கும். ஆனால் சில குறிப்பிட்டச் சொற்கள் இவ்வாறு ةவைக் கொண்டுமுடிவடையாமல் வித்தியாசமாக வரலாம். ஆதலால் நாம் ஒரு புதிய வார்த்தையை அறிந்து கொள்ளும் போது அது ஆண்பாலா? அல்லது பெண்பாலா? என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
உதாரணமாக பின் வரும் சொற்கள் ةவைக் கொண்டுமுடியாமல்வித்தியாசமாக வருவதை காணலாம்.
மகள் – بِنْتٌ மகன் – اِبْنٌ
– சகோதரி–اِخْوَتٌ சகோதரன் اَخٌ –
உடல் உறுப்புக்கள்
ü அரபியில் உடல் உறுப்புக்களை கூறும்போது ஜோடியாக இருக்கும் உறுப்புக்கள் (காது, கைகள், கால்கள்) பெண்பாலில் தான் கூறுவோம்.
ü ஒரு உறுப்பாக இருக்கும் உறுப்பை (மூக்கு, வாய்) ஆண்பாலிலும் கூறுவோம்.
மேலும் சில பெண்பால் சொற்கள்:
قِدْرٌ, شَمْسٌ, دَارٌ, نَارٌ.
لِ – حَرْفُ الجَرِّ
a) لِஒரு حَرْفُ الجَرِّஆகும். இதன் அர்த்தம் ” க்கு” … “காக” என வரும்.
(உ.ம்) :
இது யாருக்குரியது? لِمَنْ هذِهِ ؟
இது காலிதிற்கு உரியது. لِخَالِدٍهذِهِ
b) الْحَمْدُ لِلّهِ – புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியது.
இங்குاللهஎனும் வார்த்தைلِلّهِஎன மாறியுள்ளது. لِلّهِஇங்கு அலிஃப் மட்டும் விடுபட்டுள்ளது. ஒரு ل அதிகமாக சேர்க்கப்பட தேவையில்லை.
அதாவது ஒரு definiteஆன பெயர்சொல்லிற்கு முன்னாள் لِவரும் போது அந்த definiteசொல்லுடையهَمْزَةُ الوَصْلமட்டும் நீங்கும்.
(உ.ம்) :لِ + الْمُدَرِّسُ = لِلْمُدَرِّسِ
c) لِمَنْஎன்றால் “யாருக்குரியது” அல்லது “யாருக்கு சொந்தமானது” என்று அர்த்தம்.
இது யாருக்குரியது? لِمَنْ هذا؟
இந்த புத்தகம் யாருக்குரியது لِمَنْ الكتاب؟
கவனிக்கவும், இங்குمَنْஉச்சரிக்கப்படும் போது مَنِஎன மாறுகிறது. இரண்டு சுக்குன்கள் அருகருகில் வரும்போது முதல் சுக்குனிற்குரிய சொல் தற்காலிக கஸ்ரா (ِ (பெற்று உச்சரிக்கப்படுகிறது இவ்வாறு இரு சுக்குன்கள் சந்தித்தால் அதற்கு اِلْتِقَاءُ السَّاكِنَيْنஎன்று பெயர்.
اَيْضًا
اَيْضًاஎன்றால் (also) “உம்” என்று பொருள்.
هذا جميل– இது அழகானது.
وهذه ايضا جميلة– மேலும் இதுவும் அழகானது.
جِدًّا
جِدًّاஎன்றாலும் “மிகவும்” (very) என அர்த்தம்.
هي جميلة جدا– இது மிகவும் அழகானது.
هذا كبير جدا– இது மிகவும் பெரியது.
பயிற்சிகள்
- படித்து, எழுதி பழகவும்.
- கீழுள்ள படங்களைப் பார்த்து ஆண்பால் , பெண்பால் பொருட்களை தனித்தனியே அட்டவணைப் படுத்தவும்.
- உதாரணத்தைப் படித்து விட்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
- பின் வரும் வாக்கியங்களை சரி காணுக.
- பின்வரும் வார்த்தைகளின் கடைசி எழுத்தை சரியாக படித்து எழுதி பழகவும்.
الكلمات الجديدة
சலவைப் பெட்டி المِكْوَاةُ – : சைக்கிள் الدَّرَّاجَةُ – ; கரண்டி المِلْعَقَةُ – ; பானை القِدْرُ –: மாடு البَقَرَةُ – :விவசாயி الفَلَّاهُ – : மூக்கு : الاَنْفُ – வாய் الفَمُ – : காது الاُذُنُ – : கை اليَدُ – : கால் الرِجْلُ – : தேநீர் (டீ) الشَّايُ – ; அம்மா : الاُمُّ – குளிர்சாதனப்பெட்டிالثَّلَّاجَةُ – ஜன்னல் النَّافِذَةُ – , மிகவும் – :جِدًّاவேகமானது – سَرِيْعٌ காபி القَهْوَةُ-