Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 112

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 112

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 112

❤ சூரா அல் ஹஜ் 22:41

اَ لَّذِيْنَ اِنْ مَّكَّنّٰهُمْ فِى الْاَرْضِ اَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ وَاَمَرُوْا بِالْمَعْرُوْفِ وَنَهَوْا

عَنِ الْمُنْكَرِ‌ ؕ وَلِلّٰهِ عَاقِبَةُ الْاُمُوْرِ‏

அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.

❤ சூரா அத்தவ்பா 9:71

وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ

الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ؕ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ

اللّٰهُؕ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

💠 இப்னு தைமிய்யா (ரஹ்)- ஒரு தீமையை தடுக்கும்போது சில மனசங்கடமாகும் சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் ஆயினும் வலது கையில் அழுக்கு ஏற்பட்டால் அந்த அழுக்கை நீக்க பலமாக நாம் அதை கழுவுவதை போல நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விஷயங்களும் சில சந்தர்ப்பங்களில் பலத்தை பிரயோகிக்க வேண்டியிருக்கும்

💠 நபி (ஸல்) -ஒருவருக்கொருவர் நேசித்து இருவரும் பிரிந்து விடுகிறார் என்றால் இருவரில் ஒருவர் செய்கின்ற தவறு தான் அதற்கு காரணம்.

💠 நபி (ஸல்) – தொழுகையில் காலோடு கால் சேர்த்து நில்லுங்கள் இல்லையேல் உங்கள் உள்ளங்களுக்கிடையில் அல்லாஹ் முரண்பாட்டை ஏற்படுத்தி விடுவான்.

💠 கெட்ட நண்பர்கள் இறைவனுடைய அருளல்ல என்பதை புரிந்து கொள்வோம்

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply