Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 2

உசூலுல் ஹதீஸ் பாகம் 2

உசூலுல் ஹதீஸ்

பாகம்-2

 

ஸஹாபாக்கள் எவ்வாறு ஹதீஸை நபி (ஸல்)-விடமிருந்து பெற்றார்கள்❓

 அரபுகளின் முக்கிய மூலாதாரம் அவர்களின் ஞாபகசக்தியாகும்.

❖ அரபுகள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தாலும் ஞாபக சக்தியில் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள். இதனால் நபி மொழிகளை இலகுவாக மனனமிட்டனர்.

நபியவர்கள் ,ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மார்க்கத்தை போதித்தவர்களாகவே இருந்தார்கள்
(குறிப்பாக:🔰

  • தொழுகைக்கு வரும் ஸஹாபாக்களுக்கும்,
  • வீட்டில் மனைவிமார்களுடன் இருப்பினும்,
  • நீதிபதியாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் போதும்,
  • பிரயாணத்திலும்,
  • குத்பாக்களிலும், …)

❖ குறிப்பாக பள்ளியில் தொழ வரும் ஸஹாபாக்களுக்கு சில கல்வி சபைகளை உருவாக்கி கற்றுக்கொடுத்தார்கள். குறிப்பிட்ட நாளை ஒதுக்கியிருந்தார்கள்.

عن ابن مسعود- رضي الله عنه- قال: “كان النبي- صلى الله عليه وسلم- يتخولنا

بالموعظة في الأيام؛ كراهة السامة علينا (صحيح البخاري برقم :68 وصحيح

مسلم برقم :  2821)ب

“எங்களுக்கு சலிப்பு ஏற்படும் என்பதற்காக எல்லா நாட்களிலும் உபதேசங்களை செய்யாமல் குறிப்பிட்ட சில நாட்களில் உபதேசங்கள் செய்வார்கள்.” என இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள்( புஹாரி: 68 . முஸ்லிம் : 2821 )

💠 ஸஹாபாக்கள் கல்வி கற்க வரும்போது தங்களுடைய பிள்ளைகளையும் உடன் கூட்டிச்செல்வார்கள்.

💠நபியவர்கள் பாதுகாவலர்களை வைக்கவில்லை . மக்களோடு மக்களாக இருந்ததால் மக்கள் இலகுவாக செய்திகளை கேட்டுக்கொண்டார்கள்.

💠 நபி (ஸல்) வீட்டை விட்டு தூரமாக உள்ளவர்கள் , முறை வைத்து ஒருவர் மாற்றி ஒருவர் வந்து உபதேசங்களை பெற்றுச்சென்றார்கள்.
(உமர் (ரலி) – நானும் என் பக்கத்து வீட்டுக்காரரும் முறை வைத்து செல்வோம். நான் வேலைக்குச் செல்லும்போது அவர் உபதேசம் கேட்க செல்வார் அவர் வேலைக்கு செல்லும்போது நான் செல்வேன்)

💠 தூரத்திலிருப்பவர்களின் பிரச்சனைகளுக்கான தீர்வை அறிய பிரயாணம் செய்து வந்து கேட்டுத் தெரிந்துகொள்வார்கள்.
(பால் குடி சகோதரர்களாக இருந்தவர்கள் பிரிந்த சம்பவம் இதற்கு சான்றாகும்)

💠 நபி (ஸல்) வெளியூர்களுக்கு தூதுவர்களாகச் செல்பவர்களுக்கு மார்க்கத்தை போதிக்க கற்றுக்கொடுத்தார்கள்.

💠 நபி (ஸல்) வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால் மார்க்க போதகர்களை நியமித்து விட்டு சென்றார்கள்.

💠 நபி (ஸல்) விடம் தெரியாத விஷயங்கள் பற்றி கேட்டால் மௌனமாக இருப்பார்கள் வஹி வந்தால் தான் பதில் சொல்வார்கள்

💠 நபி (ஸல்) பேசும்போது விளங்கிக்கொள்வதற்காக 3 முறை சொல்வார்கள். மக்களும் கேட்டு பாடமாக்கிக் கொள்வார்கள்

💠 சில சமயங்களில் நபி (ஸல்) சஹாபாக்களிடம் கேள்வியாக கேட்பார்கள் பிறகு கற்றுக்கொடுப்பார்கள்

சில ஸஹாபாக்கள் நபி (ஸல்) வை பார்த்திருப்பார்கள் ஆனால், நேரடியாக ஹதீஸை கேட்டிருக்க மாட்டார்கள். ஆகவே அவர் வேறொரு ஸஹாபியிடமிருந்து கேட்டு தெரிந்திருப்பார்கள். ஆனால் ஹதீஸை அறிவிக்கும்போது தான் எந்த ஸஹாபியிடம் அந்த செய்தியைக் கேட்டாரோ அந்த ஸஹாபியின் பெயரைச்சொல்லாமல் அறிவிப்பார்கள். இதை ஹதீஸ் கலையில் مرسل الصحابي என்று கூறுவர்

உதாரணம் :-

  • அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) ஹிஜ்ரத்துக்கு பிறகு பிறந்தவர் ஆனால் அவர் நபி (ஸல்) வின் மக்கா வாழ்வில் நடந்த சம்பவங்களை அறிவிப்பார்கள். அவர் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோரோ அல்லது பிற ஸஹாபாக்களோ கற்றுக் கொடுத்திருப்பார்கள்.
  • நபி (ஸல்) காலத்தில் சந்திரன் பிளந்த சம்பவத்தை அறிவிக்கக்கூடிய பெரும்பாலான ஸஹாபாக்கள் நேரடியாக அந்த சம்பவத்தை காணவில்லை. பெரியவர்களிடமிருந்து கேட்டு தான் அதை அறிவித்திருக்கிறார்கள்.

🌷 சில ஸஹாபாக்கள் ஹதீஸ்களை ஏட்டில் பதிவு செய்தார்கள்

ஸஹாபாக்களில் பெரும்பாலானவர்கள் ஹதீஸ் களை மனனம் செய்யக்கூடியவர்களாக இருப்பினும் எழுதக்கூடிய சிலரும் அவர்களில் இருந்தனர்.

قال أبو هريرة:  ما من أصحاب النبي صلى الله عليه وسلم أحد أكثر حديثا عنه

مني إلا ما كان من عبد الله بن عمرو فإنه كان يكتب ولا أكتب(صحيح البخاري

برقم : 113)ب

அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) வின் ஹதீதில் என்னை விட அதிகமாக கற்றவர்கள்  எவருமில்லை அப்துல்லாஹ் இப்னு அம்ரைத் தவிர. அவர் ஹதீஸுகளை எழுதக்கூடியவராக இருந்தார் நான் எழுதுவதில்லை.(புஹாரி :113 ) 

أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ ، فَنَهَتْنِي

قُرَيْشٌ ، وَقَالُوا : تَكْتُبُ كُلَّ شَيْءٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ،

وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا ؟ فَأَمْسَكْتُ عَنْ

الْكِتَابِ ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَوْمَأَ بِإِصْبَعِهِ إِلَى فِيهِ ،

وَقَالَ : ” اكْتُبْ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، مَا خَرَجَ مِنْهُ إِلَّا حَقٌّ ” ( سنن أبي داود

برقم : 3646(

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) கூறினார்கள் :  மனனமிட நினைக்கும் நபி மொழிகளை ஏட்டில் பதிவு செய்து கொண்டிருந்தேன். குறைஷிகள் “ நபியவர்கள் சொல்வதை எல்லாம் எழுதுகின்றாயா?! அவர்கள் கோபத்திலும், திருப்தியிலும் பேசும் மனிதராயிட்டாரே “ எனக் கூறி என்னைத் தடுத்தார்கள் . நானும் தவிர்ந்து கொண்டேன் . பின்பு இதை நபியவர்களிடம் கூறினேன் . அதற்கு, நபியவர்கள் , விரலை வாயை நோக்கிச் சுட்டிக் காண்பித்து, “ அதிலிருந்து சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் வெளிவராது எனக் கூறினார்கள்

(அபூ தாவூத் : 3646 )

🌷 ஆனால் நபியவர்கள், ஆரம்ப கால கட்டத்தில் , ஹதீஸ்களை ஏடுகளில் பதிவு செய்வதைத் தடுத்தார்கள்.(முஸ்லிம் :3004)  

🌷 இதற்கு, குர்ஆனும், ஹதீஸும் கலந்துவிடுமோ என்ற பயம் காரணமாகும் . பயம் நீங்கியபோதுதான் அப்துல்லாஹ் இப்னு அம்ர் அவர்களுக்கு எழுத அனுமதித்தார்கள் . அதேபோன்று யமன் நாட்டைச்சேர்ந்த “ அபூ ஷாஹ்” அவர்களுக்கு , மக்கா வெற்றியின்போது ஆற்றிய உரையை எழுதிக்கொடுக்குமாறு ஸஹாபாக்களுக்கு கட்டளையிட்டார்கள்

(புஹாரி : 112 . முஸ்லிம் : 1355 )

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply