Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 3

உசூலுல் ஹதீஸ் பாகம் 3

உசூலுல் ஹதீஸ்

பாகம்-3

 

ஒரு ஸஹாபியை தான் முஸ்லிமாக இருக்கும்போது சந்தித்து முஸ்லிமான நிலையிலேயே மரணித்தவரை நாம் “தாபிஈ” என்போம்.

தாபியீன்களை இஸ்லாமிய அறிஞர்கள் பல படித்தரங்களாக பிரித்துள்ளார்கள். 

  • இமாம் முஸ்லிம், 3 (தபகா)படித்தரமாக தரப்படித்தியுள்ளார்
  •  இமாம் இப்னு ஸஃத் 4 படித்தரதரமாக தரப்படித்தியுள்ளார்
  • இமாம் ஹாகிம் 15 தபகாவாக தரப்படித்தியுள்ளார்

முதலாவது படித்தரமாக – சுவர்க்கத்தை கொண்டு நன்மாராயம் கூறப்பட்ட 10 ஸஹாபாக்களை சந்தித்தவர்கள்

❀ இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி – தக்ரீபுத் தஹ்தீப் என்ற நூலில், தாபிஈன்களை நான்காக தரம்பிரித்துள்ளார்கள் :

(1) மூத்த தாபிஈன்கள்

உதாரணம் : ஸஈத் பின் முஸையப்

(2) நடுத்தரமான தாபிஈன்கள்

உதாரணம் :  ஹஸன்  அல்பஸ்ரி , முஹம்மத் பின் ஸீரீன்

(3) சில ஸஹாபாக்களை சந்தித்திருந்தாலும், அவர்கள் ஹதீஸ்களை பெரும்பாலும் தாபிஈன்கள் ஊடாகவே பெற்றிருப்பார்கள் .

உதாரணம் : (இமாம் ஸுZஹ்ரீ, கதாதஹ்)

(4) இளமையான தாபிஈன்கள் : 2 அல்லது 3 ஸஹாபாக்களை கண்டிருப்பார்கள் ஆனால் ஸஹாபாக்களிடமிருந்து ஹதீஸ்களை பெற்றிருக்க மாட்டார்கள்.

உதாரணம் : அல் அஃமஷ்

 முகல்றம் (المخضرم)وهو الذي أدرك الجاهلية وزمن النبي – صلى الله عليه وسلم – وأسلم ولم يره ) ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்து ,   இஸ்லாத்தை தழுவியவர்; ஆனால் நபி (ஸல்) அவர்களை சந்திக்காதவர். (இரண்டு தலைமுறையிலும்(ஜாஹிலிய்யா+இஸ்லாம்) இருந்தவர்கள்)

உதாரணம் : அபூ உத்மான் அன்னஹ்தி .

  ஏழு சட்ட நிபுணர்கள் – الفقهاء السبعة 

ومن أكابر التابعين الفقهاء السبعة سعيد بن المسيب ، والقاسم بن محمد،وعروة

ببن الزبير، وخارجة بن زيد ، وأبو سلمة بن عبد الرحمن ،  وعبيد الله بن عبد

الله بن عتبة ،  وسليمان بن يسار

  • ஸயீத் இப்னு முஸய்யப்
  • காசிம் இப்னு முஹம்மத்
  • உர்வா இப்னு ஸுபைர்
  • ஹாரிஜத இப்னு ஸய்த்
  • அபூ ஸலமஃ இப்னு அப்திர் ரஹ்மான்
  • உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ்
  • ஸுலைமான் இப்னு யஸார்

❀ தாபிஈன்களில், இவர்களின் கருத்துகளுக்கு தனிமரியாதை உண்டு .

தாபிஈன்களில் சிறந்தவர் யார்❔

மக்கள் , தங்கள் நகரங்களில் வாழும் இமாம்களை மேன்மைப்படுத்துவர்  

உதாரணம் :

– மதீனாவில் – ஸயீத் இப்னு முஸய்யப்

– கூபாவில் – உவைஸ் அல் கர்ணீ

(இவரைப்பற்றிய அறிவிப்புகள் ஸஹீஹ்முஸ்லிமில் பதியப்பட்டுள்ளன. ஆனால் அவை சர்ச்சைக்குரியன)

– பஸ்ராவில் – ஹஸனுல் பஸ்ரி

சிறந்த பெண் தாபியிய்யாக்கள்  (التابعيات)

  • ஹப்ஸா பின்த் ஸீரீன்
  • அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான்
  • உம்மு தர்தா

خير القرون قرني، ثم الذين يلونهم ثم الذين يلونهم

❀ நபி (ஸல்) அவர்கள்,  “நூற்றாண்டுகளில் சிறந்தது , எனது நூற்றாண்டு ஆகும் . பின்பு அவர்களை அடுத்துவருபவர்கள் . பின்பு அவர்களை அடுத்துவருபவர்கள் “ என்று கூறினார்கள் .

எனது நூற்றாண்டு என்பது ஸஹாபாக்கள் . அவர்களை அடுத்துவருபவர்கள் ,தாபிஈன்கள் . அவர்களை அடுத்துவருபவர்கள், தாபிஈன்களை பின்பற்றியவர்கள் .    

ஸஹாபாக்களையும்  தாபிஈன்களையும் ஏன் அறிந்து கொள்ள வேண்டும் ?

இவர்களை அறிந்தால் தான் ஹதீஸ் ஸஹீஹானதா இல்லையா என்று நாம் தெரிந்து கொள்ள முடியும். அறிவிப்பாளர் தொடரில் ஏற்படும், இடைவெளிகளையும் அறிய முடியும்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply