அகீதாவைப் பாதுகாக்க கொள்கை உறுதி வேண்டும்.
இஸ்லாம் உறுதியான கொள்கைக் கோட்பாடுகளின் மீது கட்டியெழுப்பப்பட்ட மார்க்கமாகும். இஸ்லாமிய அகீதா கோட்பாடு என்பது ஈமானுடன் சம்பந்தப்பட்டதாகும். இந்த அகீதாவைச் சிதைத்து சின்னாபின்னமாக்குவதையே இஸ்லாத்தின் எதிரிகள் குறியாகக் கொண்டிருந்தனர். இதே போன்று இஸ்லாமிய அகீதா சிதைக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் நபித்தோழர்களும் இஸ்லாமிய உலகு ஈன்றெடுத்த அறிஞர் பெருமக்களும் உயிராயிருந்தனர்.
நபி(ச) அவர்களின் மரணத்தின் பின்னர் சில பொய்யர்கள் தம்மையும் நபி என வாதிட்டனர். அவர்களுக்குப் பின்னாலும் மக்கள் கூட்டம் மந்தைக் கூட்டங்களாகச் சென்றது. இஸ்லாமிய கிலாபத் பல்வேறுபட்ட நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். இந்த நேரத்தில் இதைப் பற்றி அலட்டிக் கொள்வதா என அபூபக்கர்(வ) அவர்கள் சிந்திக்கவில்லை. போலி நபித்துவ வாதத்தை முன்வைத்த பொய்யர்களுக்கெதிராக அபூபக்கர்(வ) அவர்கள் போர் தொடுத்தார்கள். இறுதி நபித்துவம் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டைப் பாதுகாக்க பல்லாயிரம் நபித்தோழர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன. உதிரங்கள் ஓட்டப்பட்டன. உறுப்புக்கள் அறுக்கப்பட்டன. கொள்கைப் பாதுகாப்புக்கு அந்த சமூகம் கொடுத்த அந்தஸ்தை இதிலிருந்து உணரலாம்.
இவ்வாறே, ‘நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதுதான் ஸகாத் கொடுக்க வேண்டும். அவர்கள் மரணித்த பின்னர் ஸகாத் கொடுக்கத் தேவையில்லை” என இஸ்லாமியக் கடமை ஒன்றில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டனர். இவர்களின் இந்த வாதத்தால் பைத்துல் மாலுக்கு வர வேண்டிய சிறு தொகை ஸகாத் நிதி வராது நிற்கப்போகின்றது அவ்வளவுதானே என அபூபக்கர்(வ) அவர்கள் நினைக்கவில்லை. இக் கூட்டத்திற்கு எதிராகப் போர் தொடுத்தார்கள். ஏனெனில், அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமை ஒன்றில் குழப்பத்தை உண்டு பண்ணினர்.
முஃதஸிலாக்கள் எனும் வழிகேடர்கள் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற புதிய கொள்கையை உருவாக்கி குழப்பத்தை ஏற்படுத்திய போது இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) போன்ற பல அறிஞர்கள் உயிரைப் பணயம் வைத்து அதற்கெதிராகப் போராடினார்கள். ‘நான் வாழ்ந்து சத்தியம் மரணிப்பதை விட நான் மரணித்து சத்தியம் வாழ வேண்டும்” என்பதே அவர்களின் இலட்சிய நாதமாக இருந்தது. இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைக் குழப்பங்களை ஒழிக்கும் விடயத்தில் இந்த இலட்சிய தாகம் எமது தாயிகளிடத்தில் ஏற்பட வேண்டியுள்ளது.
‘நபி(ச) அவர்கள் இறுதித் தூதராவார்கள், அவர்களுக்குப் பின்னர் வேறு நபி கிடையாது” என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்த இறுதி நபித்துவம் என்ற இஸ்லாத்தின் அத்திவாரத்தைத் தகர்த்தெறிந்த மிர்ஸாகுலாம் அஹ்மத் என்பவன் உருவாக்கிய கூட்டம் காதியானிகள், அஹ்மதிகள் என்ற பெயரில் இயங்கி வருகின்றது. இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் காபிர்கள் என சர்வதேச அறிஞர்கள் அனைவரும் ஏகோபித்து தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த குப்ர் கூட்டம், இலங்கை அரசியல் சட்டத்தில் இருக்கும் சலுகைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி கொண்டு தமது கொள்கையைப் பிரச்சாரம் செய்து வருகின்றது. அறியாத மக்கள் இவர்களின் மாய வலையில் வீழ்ந்து வருகின்றனர். புதிய இடங்களுக்குச் சென்று சாதாரண முஸ்லிம்களைத் திருமணம் செய்து அந்தக் குடும்பத்தையே தமது குப்ர் கொள்கையில் வீழ்த்தி வருகின்றனர்.
இவ்வாறே ஷீஆக்கள் எனும் சீர்கெட்ட கொள்கைக் கும்பலும் இலங்கையில் தமது பிரச்சாரத்தை வீரியப்படுத்தியுள்ளனர். அபூபக்கர், உமர்(வ) ஆகிய இரு நபித்தோழர்களையும் விட அமெரிக்காவும் , ஏரியல் ஷெரோனும் சிறந்தவர்கள். ஏரியல் ஷெரோனின் நாய் அபூபக்கர், உமர்(வ) இருவரையும் விட பல்லாயிரம் மடங்கு சிறந்தது என்று கூறக்கூடிய கொடிய கூட்டமே ஷீஆக் கூட்டமாகும். ஈரானின் இனிப்பான கவனிப்புக்களுக்காகவும் அவர்களின் நரித்தனமான தந்திரப் போக்கை புரியாததினாலும் இந்தக் கூட்டத்துடன் சிலர் கை கோர்க்கின்றனர்.
ஷீஆப் பிரச்சாரத்தின் அச்சாணியாகத் திகழ்வது ஈரானே! ஈரானின் எந்த நகர்வும் பரந்த ஷீஆ இராச்சியத்தை உருவாக்கும் யூத பாணியில் அமைந்ததே! ஷீஆக்கள் குறித்து அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் புரிய வைக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய அமைப்புக்களுக்கும், ஆலிம்களுக்கும் குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கும் இருக்கின்றது. இந்த நாட்டுக்குள் ஷீஆக்கள் வளர்வது எதிர்கால இலங்கை முஸ்லிம்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்தும். அஹ்லுஸ்ஸுன்னாவைச் சேர்ந்த முஸ்;லிம்களைக் கொல்வதை குர்பாணியாக நினைக்கக் கூடிய கொடிய கூட்டம் வளர்ந்துவிட்டால் பள்ளிகளுக்குள்ளேயே குண்டுகள் வெடிக்கும். அவர்கள் எப்போதும் காபிர்களுக்கு ஆதரவாகவும், அஹ்லுஸ் ஸுன்னா முஸ்லிம்களுக்கு எதிராகவுமே செயற்படுவர். எனவே, ஷீஆயிஷம் இலங்கையிலிருந்து முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். இது எமது இலங்கை முஸ்லிம்களின் மார்க்கத்திற்கு மட்டுமன்றி அவர்களின் இருப்புக்கும் அத்தியாவசியமானதாகும்.
இவ்வாறே, சூபித்துவம் என்ற பெயரில் மாற்றுமத சிந்தனைகளை இஸ்லாமாகச் சித்தரிக்கக் கூடிய சீர்கெட்ட பல சித்தாந்தங்களும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வேரூன்றி வருகின்றது. காண்பன யாவும் கடவுள், வஹ்ததுல் வுஜூத், ஹுலூல் இத்திஹாத் போன்ற குப்ரான கொள்கையும் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
வஹ்ததுல் வுஜூத் பேசும் காத்தான்குடி அப்துர் ரஊபிற்கு ‘முர்தத்” பட்டம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் தனது கொள்கையைப் பிரச்சாரம் செய்வதில்லை என்ற அடிப்படையில் அந்த பத்வா செயல் இழந்து போனது. ஆனால், அவர் சில அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற்று தனது அமைப்பைப் பாராளுமன்றத்தில் பதிந்து சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றார். அவரிடம் இருக்கும் ஓரிரு ஆயிரம் ஓட்டுக்காக அரசியல்வாதிகள் சிலர் அவருக்கு வால்பிடிக்கின்றனர். முஸ்லிம் உம்மத்திற்குள் குப்ரை வளர்க்கிறோமே என்ற குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் ஓட்டுக்காக ஈமானுக்கு வேட்டு வைக்கின்றனர். ஓட்டுக்காகவும், நோட்டுக்காகவும் கொள்கையைக் குழி தோண்டிப் புதைக்கும் இத்தகைய தலைவர்கள் நாட்டுக்குத் தேவையில்லை. இத்தகையவர்களை இனங்கண்டு முஸ்லிம் சமூகம் முழுமையாகப் புறக்கணிக்க முன்வர வேண்டும். என்ன செய்ய, அரசியலுக்கு இவர் தேவை… ஊருக்கு இவர் தேவை… என கொள்கைக் கொலை செய்பவர்களை அரசியல் தலைவர்களாக்குவது ஆபத்தானது! எனவே, இத்தகைய தலைவர்களை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும். இஸ்லாத்தில் அரசியல் வேறு மார்க்கம் வேறு என்ற நிலை இல்லை.
மார்க்கத்திற்கு வேட்டுவைக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை விட முஸ்லிம்களுடன் நட்புறவைப் பேண விரும்பும் மாற்றுமத அரசியல் தலைவர்கள் பரவாயில்லை எனலாம். எனவே, ஷீஆயிஷம், வஹ்ததுல் வுஜூத் போன்ற வழிகெட்ட கொள்கைகளுக்குத் துணை போகும் அரசியல் தலைவர்களுக்கு வாக்களிப்பதில்லை என்று முடிவு செய்தால்தான் ஓட்டுப் பிச்சைக்காரர்களை ஓரளவு பணிந்து வரச் செய்யலாம்.
இவ்வாறே இலங்கையில் ஹதீஸ் மறுப்புக்கொள்கையும், ஸஹாபாக்களை இழிவுபடுத்தும் கூட்டமும் வளர்ந்து வருகின்றது. இத்தனைக்கும் மத்தியில் இஸ்லாமிய கிலாபாதான் முக்கியம். எனவே, இந்தப் பிரச்சினைகளைப் பெரிது படுத்தக் கூடாது, ஒன்றுபட வேண்டும் என்று ஒரு கூட்டம் போலி ஒற்றுமையும் அர்த்தமற்ற கிலாபாவும் பேசி வருகின்றது. அபூபக்கர்(வ) அவர்கள் இப்படி சிந்தித்திருந்தால் இஸ்லாத்தின் அடிப்படைகளே அழிக்கப்பட்டிருக்கும் என்பதை ஏனோ இவர்கள் சிந்திப்பதில்லை.
இவ்வாறு அலையலையாக இஸ்லாமிய அகீதா பல சவால்களை சந்தித்து வரும் நிலையில் இஸ்லாமிய அகீதாவைப் பாதுகாக்கவும், பரப்பவும், பலப்படுத்தவும் முயற்சிகளை முடுக்கிவிட வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இஸ்லாமிய அழைப்பாளர்களும் அமைப்புக்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் இது குறித்து கூடுதல் கரிசணை காட்ட வேண்டியுள்ளது.
இஸ்லாமிய அகீதா சீரில்லாமல் செய்யப்படும் நல்லமல்கள் அங்கீகரிக்கப்படப் போவதில்லை. எனவே, அகீதாவைப் பாதுகாப்பதற்கு நாம் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். வழிகேடர்களின் கொள்கைகள், அவற்றுக்கான மறுப்புக்கள் குறித்து உலமாக்கள் விழிப்பூட்டப்பட வேண்டும். பள்ளி நிர்வாகிகளுக்கு இது பற்றிய அறிவு அவசியமாகும். பள்ளியில் கடமையாற்ற இணைத்துக் கொள்ளப்படும் ஆலிமின் கொள்கை எந்தப் பின்னணியில் உள்ளது என அலசி ஆராய்ந்த பின்னரே பள்ளிகளில் பணிக்குச் சேர்க்க வேண்டும். மஸாயில்கள் விடயத்தில் மோதிக் கொள்ளும் போக்கைத் தவிர்க்க வேண்டும். குர்ஆன், ஸுன்னாவின் அடிப்படையில் அவற்றைத் தீர்த்துக் கொள்ளும் திறந்த மனநிலைக்கு வரவேண்டும்.
திருமணங்கள் நிச்சயிக்கப்பட முன்னர் அவரவர் கொள்கை நிலை என்ன என்பது குறித்து ஆராய வேண்டும். காதியாணிக்கோ அல்லது ஷீஆவுக்கோ பெண்ணைக் கொடுத்துவிட்டு நாமும் அந்தக் கொள்கைக்கு அடிமையாகிவிடக் கூடாது. பெற்றெடுத்து பாசத்தோடு வளர்த்த பெண்ணைக் குப்ருக்குத் தாரைவார்த்துக் கொடுத்துவிடக் கூடாது. இது குறித்தெல்லாம் சமூகம் விழிப்பூட்டப்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு காலத்தின் கட்டாய தஃவாவாக தப்லீக்காக இருக்கின்றது. இந்தப் பணியைச் செய்ய அனைவரும் உறுதி பூணுவோமாக!
ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி..