Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126

அகீதா மின்ஹாஜுல் முஸ்லீம் பாகம் – 126

அகீதா

மின்ஹாஜுல் முஸ்லீம்

பாகம் – 126

♦️நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் ?

ஈமானில் மிகச்சிறந்தவர்கள் ஹுலபாஉ ராஷிதூன்கள் (நேர்வழி பெற்று நேர்வழியில் நடந்த 4 கலீஃபாக்கள்)

وللحديث شاهد عن سَفِينَةُ رضي الله عنه، قال: قال رسول الله صلى الله عليه

وسلم: الْخِلاَفَةُ فِي أُمّتِي ثَلاَثُونَ سَنَةً، ثُمّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ. ثُمّ قَالَ سَفِينَةُ: امْسِكْ عَلَيْكَ

خِلاَفَةَ أَبي بَكْرٍ، ثُمّ قَالَ: وَخِلاَفةَ عُمَرَ وَخِلاَفَةَ عُثْمانَ، ثُمّ قَالَ لي: امسِكْ خِلاَفَةَ

عَلِيّ قال: فَوَجَدْنَاهَا ثَلاَثِينَ سَنَةً. رواه أحمد وحسنه الأرناؤوط.

♦️ நபி (ஸல்) – என்னுடைய உம்மத்தில் 30 வருடங்கள் ஹிலாஃபத் ஆட்சி நடக்கும்.

ثم تكون خلافة على منهاج النبوة فتكون ما شاء الله

♦️ நபி (ஸல்) – நபித்துவத்தின் அடிப்படையில் ஒரு ஹிலாஃபத் உருவாகும்.

♦️ ஸஹாபாக்களின் மிகச்சிறந்தவர்கள்

அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி)

♦️அதற்குப்பின்னர் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேர்

 

  • அபூபக்கர் (ரலி)
  • உமர் (ரலி)
  • உஸ்மான் (ரலி)
  • அலீ (ரலி)
  • அப்துல் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
  • ஸுபைர் இப்னு அவ்வாம் (ரலி)
  • ஸஹ்த் இப்னு அபீவக்காஸ் (ரலி)
  • தல்ஹத் இப்னு உபைதுல்லாஹ்(ரலி)
  • சயீத் இப்னு ஸைத் (ரலி)
  • அபூஉபைதா இப்னுல் ஜர்ராஹ் (ரலி)

 

மொத்த ஸஹாபாக்களில் 10 பேர் தான் சொர்கத்திற்கு செல்வார்கள் என்று புரிந்துகொள்ளக்கூடாது.

♦️ அடுத்ததாக பதரில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள்.

பிறகு மேற்கூறப்பட்ட 10 பேரை தவிர வேறு சந்தர்ப்பங்களில் சொர்கத்திற்

காக நன்மாராயம் கூறப்பட்டவர்கள்.(பாத்திமா (ரலி) அவர்களது இரண்டு பிள்ளைகள், ஸாபித் இப்னு கைஸ் (ரலி),

♦️ பின்னர் ஹுதைபிய்யா உடன்படிக்கையில் கலந்து கொண்ட அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டதாக கூறுகிறான்.

♦️ ஹதீஸுகளை அறிவித்த நபித்தோழர்கள் மொத்தமாகவே 1000 பேர் தான்.

ஹதீஸுகளை அறிவித்தவர்களை 3 ஆகா பிரிக்கலாம்

 

  • கூடுதலாக அறிவித்தவர்கள்
  • குறைவாக அறிவித்தவர்கள்
  • மிக குறைவாக அறிவித்தவர்கள்

 

சூரா அல் ஹஷர் 59:10

وَالَّذِيْنَ جَآءُوْ مِنْۢ بَعْدِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اغْفِرْ لَـنَا وَلِاِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْاِيْمَانِ وَلَا تَجْعَلْ فِىْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِيْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِيْمٌ

அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.

ليس منا من لم يوقر الكبير ويرحم الصغير

நபி (ஸல்) – யார் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையே சிறியவர்கள் மீது கருணை காட்டவில்லையோ அவர்கள் எம்மை சேர்ந்தவரல்லர்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply