Home / Uncategorized / கறுப்பு ஜூன் 15 (இலங்கை பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்)

கறுப்பு ஜூன் 15 (இலங்கை பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்)

அஸ்ஸலாமு அலைக்கும்…

இலங்கை அழுத்கம பகுதியில் பாதிக்கப்பட்ட சகோதர்களுக்கு உண்ண உணவும் மற்றும் குழந்தைகளுக்கு பாலும் தேவைப் படுகிறது, முடிந்தவர்கள் அவசரமாக உதவுங்கள்….
மேலும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்….

தொடர்புக்கு : masjidthowheed Colombo 9 or call 0776133248, 0777636590….

கறுப்பு ஜூன் 15 (பேருவளை தர்கா நகர் அலுதகமவில் இடம்பெற்ற உண்மை நிலவரம்)

நன்றி
Sajeet Sajeetkky

மேலும் நிலவரங்கள் அறிய

https://www.facebook.com/ceylonmoors

www.sonakar.com

 

நபிகளார் வாழும் போது

முஸ்லிம்களுக்கு அநியாயமிழைக்கப்பட்டால்-
——————————————————————-

1-விதவைகளானவர்களை மணமுடிப்பவர்கள் இருந்தார்கள்

2-அநாதைகளை வாழ் நாள் முழுதும் பொறுப்பெடுப்பவர்கள் இருந்தார்கள்

3-அகதிகளுக்கு தஞ்சமளிப்பவர்கள் இருந்தார்கள்.

4-கதியற்றவர்களுக்கு தொழில் வழங்குபவர்கள் இருந்தார்கள்.

இதனால் அந்த சமூகத்தின் ஆண்மக்கள் அநியாயங்களை அல்லாஹ்விற்காய் துணிந்து எதிர்கொண்டார்கள்

ஆனால் இன்று-
———————-

அவ்வாறு இல்லை இதற்கு முன் நடந்த கலவரங்கள் அதற்கு சாட்சி. தன் உயிரைக் கொடுத்துப் போராட நினைப்பவர்கள் யோசிக்கும் ஓா் அம்சம் இது மாத்திரம்தான்

எனவே
————-

இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலர் உணவுடனும் தற்காலிக தஞ்சமளிப்புடனும் உதவிகள் நின்றுவிடாமல் பாதிக்கப்படும் மக்களை இஸ்லாமிய உறவுகள் கைவிடாது என்ற நம்பிக்கையை பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியவர்களின் சமூகங்களிலும் விதைப்போமாக!

நன்றி

மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன்.

Check Also

01: புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல்

வாராந்திர பயான் நிகழ்ச்சி புதுமண தம்பதிகளுக்கு சில வழிகாட்டல் (இஸ்லாமிய ‍‌‍குடும்பவியல்-பாகம்-12), உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : …

3 comments

  1. கானொளியில் பதிவாகியிருக்கும் காட்சிகள் எம் இதயத்தை உருக செய்துள்ளது.
    திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கலவரத்திற்கு பொறுப்பான “பொது பாலா சேனா” தீவிரவாத அமைப்பை இலங்கை அரசாங்கம் தடை செய்ய தவறும் பட்சத்தில் – நாட்டின் ஒற்றுமை சீர்குலைந்து மற்றுமொரு உள்நாட்டு யுத்தம் தொடங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    கலவரத்தில் கொல்லப்பட்ட மக்களின் குடும்பத்தாருக்கும், படுகாயம் அடைந்திருக்கும் மக்களுக்காகவும், வீடுகளை இழந்து பள்ளிவாசல்களில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்களுக்காகவும், வியாபார தளங்களை இழந்திருக்கும் எம் மக்களுக்காகவும் நாம் கண்டிப்பாக உதவிட வேண்டிய சூலில் இருக்கின்றோம்.

    எம் சகோதரர்களும், சகோதரிகளும் படும் துன்பங்களையும் துயரங்களையும் நாங்கள் கடல் கடந்து வாழ்ந்தாலும் எங்களால் உணர முடிகிறது.

    உங்களுக்கு அடி பட்டால் அது எங்களுக்கும் வலிக்கும். ஏனென்றால் நாம் அனைவரும் இஸ்லாம் என்ற அழகிய மார்க்க உறவினால் சகோதர சகோதரிகளாக இருக்கின்றோம்.

    எம்மால் முடிந்த உதவிகளை செய்து – எம் தொழுகைகளில் உங்களுக்காக இரு கரம் எந்திடுவோம்.

  2. Insha Allah we must help as much as we can. Muslims must prepare to defend such this terror group attacks in Srilanka and as well in any part of this world.

  3. retham kothikkuthu. insa allah naam thayaraha ullome karuppu kodi enthum naal vanthu vittadhu muslimkalai alithuvida allah orupothum vidamaattan.

Leave a Reply