Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 13

உசூலுல் ஹதீஸ் பாகம் 13

உசூலுல் ஹதீஸ்

பாகம்-13

338. ‘ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து ‘நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து ‘இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது’ எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?’ என்று கேட்டார்கள்’ என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.

Book : 7 புஹாரி

⚜ அதை உமர் ரலி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கீழ்கண்ட ஹதீஸின் மூலம் அறிய முடிகிறது

346. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ‘அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டதற்கு, ‘தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, ‘நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், ‘தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது’ என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?’ என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, ‘(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, ‘அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். ‘தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?’ என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, ‘இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்’ என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.

இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீமிடம் நான் கேட்டதற்கு அவர் ‘ஆம்! என்றார்’ என அஃமஷ் அறிவித்தார்.

Book :7 புஹாரி

 உமர் (ரலி) அந்த சம்பவத்தின் போது அம்மார் (ரலி) யுடன் இருந்தார்கள் ஆனால் அந்த சம்பவத்தை உமர் (ரலி) மறந்ததால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உமர் (ரலி) யின் கருத்துப்படி சிறுதொடக்கிற்கு மட்டுமே தயம்மும் செய்ய வேண்டும் என்ற கருத்தில் இருந்தார்கள்.
உமர் (ரலி) முதலாவதாக குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் பிறகு ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பது போன்ற கருத்தில் இருந்தார்கள்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply