Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / உசூலுல் ஹதீஸ் பாகம் 21

உசூலுல் ஹதீஸ் பாகம் 21

உசூலுல் ஹதீஸ்

பாகம்-21

🔷 இப்படி இழுபறி நீடித்த சந்தர்ப்பத்தில் அலீ (ரலி) இராக் மக்களை ஒன்று திரட்டி ஷாம் தேசத்திற்கு படையெடுத்து சென்றார்கள். அங்கே முஆவியா (ரலி) அவர்களும் ஷாம் மக்களை திரட்டி படையெடுத்து வந்தார்கள். இரண்டு படைகளும் ஸிஃப்பீன் என்ற இடத்தில் சந்தித்தார்கள். அங்கு பல மாதங்கள் சண்டை நடைபெற்று ஷாம் தேசத்தவர்கள் தோல்வியடைய இருக்கும் நிலையில் அமர் இப்னு அல் ஆஸ் (ரலி) வின் ஆலோசனையின் அடிப்படையில் முஸ்ஹப்களை உயர்த்தி அல்லாஹ்வுடைய இந்த வேதத்தின் பால் உங்களை அழைக்கிறோம்; இந்த வேதம் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று கோஷமிட்டார்கள். இதைக்கண்ட அலீ (ரலி) வின் படை குறிப்பாக குர்ஆ என்ற கூட்டத்தினர் யுத்தம் செய்வதை நிறுத்தி விட்டார்கள். அதற்கு அவர்கள் 3:23 வசனத்தை ஆதாரமாக கூறினார்கள்.

சூரா ஆல-இம்ரான் 3:23

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِّنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَىٰ كِتَابِ اللَّهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّىٰ فَرِيقٌ مِّنْهُمْ وَهُم مُّعْرِضُونَ

(23) வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.

🔷 யுத்தத்தை நிறுத்தியவர்கள்(குர்ஆ) ஷாம் வாசிகளுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். கடிதத்தில் “உங்களிலிருந்து ஒரு நடுவரை அனுப்புங்கள் எங்களிலிருந்து ஒரு நடுவர் வருவார் அவர்கள் இருவரில் யாரெல்லம் யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லையோ அவர்களில் சிலரும் வருவார்கள் . அவர்கள் சேர்ந்து எடுக்கும் முடிவிற்கு நாங்கள் கட்டுப்படுவோம்” என்று. அதற்கு அலி (ரலி) அவர்களும் உடனிருந்தவர்களும் கட்டுப்பட்டபோதிலும் ஹவாரிஜுகளாக மாறியவர்கள் அதை நிராகரித்தார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply