ஃபிக்ஹ் பாகம் – 4
உளூவின் ஃபர்ளுகள்
உளூவின் ஃபர்ளுகள்
❤ ஸூரத்துல் மாயிதா 5:6
- முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்,
- கைகளை முட்டு வரை கழுவிக்கொள்ளுங்கள்,
- தலைகளை தடவிக்கொள்ளுங்கள்,
- இரண்டு கால்களையும் கரண்டை வரை கழுவிக்கொள்ளுங்கள்
☘ குர்ஆன் ஹதீஸில் உள்ள கருத்துக்களை ஆழமாக ஆய்வு செய்து படிப்பதே பிக்ஹ் எனும் கல்வியாகும்.
உளூவின் பர்ளுகள்:
1. நிய்யத்
ஆதாரம்: – إِنَّما الأَغْمَالُ بِالنِّيَّت உமர் (ரலி) – நபி (ஸல்) – எண்ணங்களை கொண்டே அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது கூலி கொடுக்கப்படும்.
☘ இபாதத் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால்; இஸ்லாஹ் ( அல்லாஹ்விற்காக செய்தல் என எண்ணம் கொள்ளுதல்) வேண்டும்.
☘ நிய்யத் (எண்ணம்) உள்ளத்தால் ஒன்றை நினைப்பது அல்லது உறுதிப்படுத்துவது.
☘ இப்னுல் கய்யிம் (ரஹ்) – நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.
நிய்யத்திற்கும் நாவிற்கு சம்பந்தமில்லை. நிய்யத்தை நாவல் சொல்பவர் மார்க்கத்தில் புதுமையை (பித்அத்) செய்தவராவார்.
2. முகத்தை கழுவுதல்:
முடி துடங்கும் இடம் முதல் தாடை வரை இரண்டு காதுகளுக்கு இடைப்பட்ட பகுதி முழுவதும் கழுவ வேண்டும்.
3. கைகள் (முழங்கைகள் வரை):
விரல் நுனியிலிருந்து முழங்கைகள் வரை கழுவ வேண்டும்.