ஃபிக்ஹ் பாகம் – 7
கடமையான குளிப்பு
الغسل குளிப்பு
5 –ஒருவர் இஸ்லாத்திற்கு வந்தால்
துமாமா (ரலி) இஸ்லாத்திற்கு வந்தபோது நபி (ஸல்) அவரிடம் குளிக்க கட்டளையிட்டார்கள் அவர்களும் குளித்துவிட்டு வந்தார்கள் (முஸ்னத் அஹ்மத்)
🍂சுன்னத்தான குளிப்புகள்
●ஜும்மா நாளில் குளிப்பது
●பெருநாள் நாட்களில் குளிப்பது
●இஹ்ராமிற்காக குளிப்பது
●மக்காவிற்குள் நுழைவதற்கு முன்னால் குளிப்பது :
மக்காவில் நுழைய நாடுபவர் குளிப்பது ஸுன்னத்தாகும். இப்னு உமர்(ரலி) அவர்கள் மக்காவுக்கு வந்தால் “தீதுவா” என்ற இடத்தில் இரவு தங்கி காலையில் குளித்தபின்பு, பகல் பொழுதில்தான் மக்காவினுள் நுழைவார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்வார்கள் என்று இப்னு உமர் கூறினார்கள் (புகாரி, முஸ்லிம்)
●அரபா விற்குள் நுழைவதற்கு முன்னால் குளிப்பது :
ஹஜ்ஜின் போது அரஃபாவில் தங்குவதற்காகக் குளிப்பது ஸுன்னத்தாகும். இமாம் நாஃபிஇ (ரஹ்) கூறியதாக இமாம் மாலிக் (ரஹ்) அறிவிக்கும் ஹதீஸ்
அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் இஹ்ராம் அணிவதற்கு முன்பும், மக்காவில் நுழைவதற்காகவும் அரஃபாவில் தங்குவதற்காகவும் குளிப்பார்கள்.