أَمْ أَمِنتُم مَّن فِي السَّمَاءِ أَن يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ۖفَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرِ﴿١٧﴾
(அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அறிந்து கொள்வீர்கள்). அல்முல்க் – 17
காற்றுடனான கல் மழையை அனுப்புவான். அது உங்களை அழித்துவிடும் என்பதாக மற்றொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
(நிலப்பரப்பின் ஒரு பகுதியில் அவன் உங்களை விழுங்கச் செய்வது பற்றியோ, உங்கள் மீது கல் மழை பொழிவது பற்றியோ அச்சமற்று இருக்கிறீர்களா? பின்னர் உங்களுக்கு எந்தப் பொறுப்பாளரையும் காணமாட்டீர்கள்) பனூ இஸ்ராயீல் – 68.
மேலும் மனிதன் நிம்மதியின்றி பயத்துடன் வாழ வேண்டும் என்பதுபோல் அவ்வசனம் பேசுவதை நாம் கவனிக்கலாம்.
அதன் விளக்கம் யாதெனில்:
அல்லாஹ் இவ்விடத்தில் மறுத்துக் கூறும் பாதுகாப்பு என்னவென்றால்,அவனுக்கு வழிப்படாமலும், அவனது தண்டனைகளை மறந்தும் பாவகாரியங்களில் ஈடுபடுவோர் மீது உலகிலேயே அல்லாஹ்வின் தண்டனைகள் வருவது பற்றி எச்சரிக்கை செய்வதாகும்.
மற்றோர் இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்;:
(தீய காரியங்களுக்காக சூழ்ச்சி செய்தோரை பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்து விடுவான்,அல்லது அவர்கள் அறியாத விதத்தில் வேதனை அவர்களுக்கு வந்து விடும்) அந் நஹ்ல் – 45.