قُلْ هُوَ الرَّحْمَـٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا ۖ فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ﴿٢٩﴾
(அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனைச் சார்ந்திருந்தோம். தெளிவான வழி கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்” எனக் கூறுவீராக!). அல்முல்க் – 29
(அவனே அகிலத்தாருக்கெல்லாம் அரசனாக இருக்கிறான். அவன் அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். மேலும் எமது அனைத்துக் காரியங்களிலும் அவன் மீதே நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.
அல்லாஹ் கூறுகிறான்:
(வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக!). ஹூத் – 123.
(தெளிவான வழிக்கேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள்”).
இவ்வுலகிலும், மறுவுலகிலும் இறுதி முடிவு உங்களுக்கா? அல்லது எங்களுக்கா? என்பதை அறிந்து கொள்வீர்கள்.